www.garudavega.com

நடிகர் அஜித்குமாருடன் 10 மணி நேர விமானப்பயணம்.. பிரபல தொழிலதிபர் பகிர்ந்த வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இங்கிலாந்து நாட்டிற்கு அஜித் உடன் விமானத்தில் பயணம் செய்தது குறித்து பிரபல தொழிலதிபரின் பதிவு வைரலாகி வருகிறது.

Karsun Innovations Center Srikanth Devarajan about flight travel with Ajithkumar

Also read | "25 வருஷம் நாய் மாரி"... "ஒரு படத்துக்கும் Payment Settle பண்ல" - கேமரா மேன் Painful Story!

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு  அஜித் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது இந்த பயணம் நடந்து வருகிறது.

Karsun Innovations Center Srikanth Devarajan about flight travel with Ajithkumar

சிலநாட்களுக்கு முன் பிரிட்டன் லண்டன் நகர வீதிகளில் (ஹேட்டன் கிராஸ் நிலையம்) ரசிகர்களுடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் வைரலாகின.

இந்நிலையில் பிரபல தொழிலதிபர் ஶ்ரீ காந்த் தேவராஜன் தனது LinkedIn பக்கத்தில் அஜித் உடன் விமானத்தில் பயணம் செய்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.‌அதில், திரு.அஜித் குமார் மற்ற பயணிகளிடையே அமைதியாக நடந்து வந்து எங்கள் அருகில் அமர்ந்தார். 10 மணி நேர விமானத்தில் உங்கள் அருகில் மிகவும் பிரபலமான தமிழ் திரைப்பட நட்சத்திரம் அமர்ந்திருப்பது எவ்வளவு அருமையாக தருணம். நான் அதை எதிர்பார்க்கவில்லை. எனது வயதான பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தரமான நேரத்தை செலவழித்த ஒரு மறக்கமுடியாத பயணம் இது. மேலும் ஒரு சில பிரபலங்களைச் சந்தித்துப் பேசியதும்." என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

Karsun Innovations Center Srikanth Devarajan about flight travel with Ajithkumar

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | பிரபல டாப் போட்டோஃகிராபருடன் இணைந்து பிரியா பவானி சங்கர் PHOTOSHOOT.. ட்ரெண்ட் ஆன போட்டோஸ்!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Karsun Innovations Center Srikanth Devarajan about flight travel with Ajithkumar

People looking for online information on Ajith Kumar, Flight travel, Karsun Innovations Center, Srikanth Devarajan will find this news story useful.