இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் கொரோனா பெருந்தொற்று படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது.
இதனை அடுத்து கர்நாடகாவில், திரையரங்குகளை திறக்கலாம் என அந்த மாநில அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. திரையரங்குகள் திறக்கப் படாததால் பெரும்பாலான திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும், சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவதும் தொடர்ந்து வந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக கொரோனாவால் கர்நாடகாவில் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், இன்னும் என்னவெல்லாம் கூடுதல் தளர்வுகளை வழங்கலாம் என்பது குறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் எடுக்கப்பட்ட முடிவின்படி திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பெரிய வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை தற்காலிகமாக திறப்பதற்கு அனுமதி அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நிமித்தமாக, கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படுவதற்கு கர்நாடக அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.