நடிகர் சோனு சூட்டிற்கு தங்க பதக்கம் ஒன்றை வழங்கி அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் அதிகமான மக்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Also Read | அமெரிக்காவில் சத்குருவுடன் GOLF ஆடிய நடிகை ரகுல் ப்ரித் சிங்.. செம வைரலாகும் சூப்பர் வீடியோ!
சோனு சூட்
பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.
கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதன்மூலம் நாடே சோனு சூட்டை பாராட்டியது. மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
கராத்தே சாம்பியன்
கராத்தே போட்டிகளில் அகில இந்திய அளவில் தங்க பதக்கம் வென்றவர் அம்ரித்பால். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிலை வந்தது. அந்நிலையில் நடிகர் சோனு சூட் தனது செலவில் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதனால் அம்ரித்பால்-க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் தற்போது பூரண நலத்துடன் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இதுகுறித்து சோனு சூட்,"மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கத்தை நீங்கள் காணும்போது, அது உங்கள் வாழ்க்கையை இன்னும் மதிப்புமிக்கதாக்குகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு அம்ரித்பாலுக்கு முழங்கால் அறுவை சிகிச்சை அவசரமாக தேவைப்படும்போது அவரைச் சந்தித்தேன். அவர் பெரிய கனவுகளைக் கொண்டிருந்தார். ஆனால் சூழ்நிலைகள் அவரை அதைச் செய்ய அனுமதிக்கவில்லை. அவருக்கு உதவியது என் வாழ்வின் மிகப் பெரிய கவுரவங்களில் ஒன்றாகும். அகில இந்திய கராத்தே சாம்பியன் அம்ரித்பால், எதிரணிக்கு ஒரு புள்ளி கூட கொடுக்காமல் தங்கப் பதக்கம் வென்றார். விரைவில் பர்மிங்காமில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். அவர் நம் அனைவருக்கும் பெருமையை அளிக்க இருக்கிறார் என்று நான் நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அர்ப்பணிப்பு
இதுகுறித்து அம்ரித்பால் இதுகுறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"2 வருடங்களுக்கு முன்னர் எனது மீட்பரை நான் கண்டடைந்தேன். உங்களது கனிவிற்கு நன்றி. என்னுடைய அகில இந்திய தங்க பதக்கத்தை உங்களுக்கு அப்பணிக்கிறேன். உங்களது உதவி இல்லையென்றால் அதனை என்னால் செய்திருக்கு முடியாது' எனக் குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் சோனு சூட்டிற்கு கராத்தே சாம்பியன் அம்ரித் பால் தங்க பதக்கத்தை அர்பணிப்பதாக வெளியிட்ட பதிவு பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Also Read | தமிழக உரிமத்தை தொடர்ந்து 'கோப்ரா' படத்தின் தெலுங்கு உரிமம்! கைப்பற்றிய முன்னணி நிறுவனம்