பிரபல வசந்த் அன் கோ ஓனரும், காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் பல மாதங்களுக்கு காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எனவே கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இரண்டுமே ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை அடுத்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும், அதே போல, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில், மறைந்த காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாரின் மகனும் சென்னை-28, நாடோடிகள், ஜிகினா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகருமான விஜய் வசந்த் போட்டியிட்டுள்ளார். இதே தொகுதியில் பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மீண்டும் இம்முறை போட்டியிட்டுள்ளார்.
முன்னதாக பிரச்சாரத்தில்ம் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மக்கள் தனது தந்தைக்கு அளித்த ஆதரவை தனக்கும் தரவேண்டும் என்று விஜய் வசந்த் கேட்டுக்கொண்டிருந்தார்.
என் மீது அன்பும் பாசமும் பொழிந்த குமரி மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் எனது நன்றி. இந்த வெற்றியை வீதிக்கு வந்து கொண்டாடாமல் வீட்டிலிருந்தே கொண்டாடும் படி கேட்டுக்கொள்கிறேன். pic.twitter.com/Xd8w6onvoC
— VijayVasanth (@iamvijayvasanth) May 2, 2021
இந்த சூழலில் இன்று காலை முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற விஜய் வசந்த் மக்களுக்கு நன்றி சொல்லி ட்வீட் பதிவிட்டுள்ளார்.
ALSO READ: முதல் ரவுண்ட்லயே முன்னிலை... முதல் தேர்தலிலேயே மாஸ் காட்டும் நடிகர் உதயநிதி ஸ்டாலின்!