www.garudavega.com

BHARATHI KANNAMMA : வெண்பா தாக்கப்பட்டார்.. 😂 பாரதியுடன் அவசர திருமணம்.. படையோடு வந்து தடுத்த கண்ணம்மா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் முக்கிய சீரியல் பாரதி கண்ணம்மா. விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

Kannamma Stops Bharathi Venba Marriage Bharathi Kannamma

Also Read | ஹே சினாமிகாவை தொடர்ந்து பிருந்தா மாஸ்டரின் ஆக்‌ஷன் படமான தக்ஸ்.. ஆடியோ குறித்த செம அப்டேட்..!

இந்த சீரியலில் காதலித்து திருமணம் செய்த பாரதியும் கண்ணம்மாவும் பாரதியின் சந்தேகத்தின் பேரில் பிரிந்து வாழ்கின்றனர். அதன்பிறகு கண்ணம்மாவை விவாகரத்து செய்வதற்கு பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் இவர்களுடைய விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இவர்களை சில மாதங்கள் சேர்ந்து வாழ்வதற்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சில நாட்கள் சேர்ந்து வாழ்ந்து பின்னர் அவரவர் வீட்டில் பிரிந்து வாழ்கின்றனர். இதனிடையே இவர்களின் இரண்டு குழந்தைகளுள் லட்சுமி கண்ணாம்மாவிடமும், ஹேமா பாரதியிடமும் வளர்ந்து வருகிறார்கள்.

Kannamma Stops Bharathi Venba Marriage Bharathi Kannamma

ஆனால் இதில் ஹேமாவிடம் பாரதி, தான் அவரது அப்பா இல்லை என்றும் ஹேமா ஆதரவற்ற இல்லத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட குழந்தை என்றும் கூறிவிட்டார். ஆக, இவர்களில் குழந்தை ஹேமா மற்றும் பாரதி ஆகிய இருவரைத் தவிர மற்ற அனைவருக்குமே ஹேமா மற்றும் லட்சுமி ஆகிய இரு குழந்தைகளும் பாரதி மற்றும் கண்ணம்மா தம்பதியருக்கு பிறந்தவர்கள் என்பது தெரியும். ஆனால் பாரதி இதை நம்பாமல் இருந்து வந்த நிலையில், தற்போது கண்ணம்மாவின் வலியுறுத்தலால் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க சாம்பிள்களை கொடுத்திருக்கிறார்.

Kannamma Stops Bharathi Venba Marriage Bharathi Kannamma

இந்த நிலைமையில்தான் பாரதியிடம் தன்னை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தி வந்த வெண்பாவுக்கு ரோஹித்துடன் அவசர அவசரமாக அவரது அம்மாவால் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த திருமணத்தில் இருந்து தப்பித்து வந்த வெண்பா பாரதியை கூட்டிக்கொண்டு திருமணம் செய்வதற்காக கோவிலுக்கு சென்று விட்டார். இதை விருப்பம் இல்லாமல் தயக்கத்துடன் தவிர்த்து வந்த பாரதி, டிஎன்ஏ ரிசல்ட் அதற்குள் வந்து விட்டால் வெண்பா கழுத்தில் தாலி கட்ட வேண்டிய அவசியமில்லை என்று யோசித்தார்.

Kannamma Stops Bharathi Venba Marriage Bharathi Kannamma

ஆனாலும் டிஎன்ஏ டெஸ்ட் வருவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மருத்துவமனை லேப் டெக்னீசியன் கூறிவிட்டநிலையில், பாரதி வேறு வழியின்றி வெண்பாவிடம் சிக்கினார். அவரை தன் கழுத்தில் தாலி கட்டும் கட்டாய சூழ்நிலைக்கு வெண்பா அழைத்து சென்றுவிட, எனினும் விருப்பமின்றி நின்றுகொண்டிருந்த பாரதி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோதுதான் அங்கு கண்ணம்மா ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு வந்து திருமணத்தை தடுத்துவிட்டார்.

Kannamma Stops Bharathi Venba Marriage Bharathi Kannamma

வந்தவர் வெண்பாவை பளார் பளார் என்று அறை விட்டு மாலையை பிடுங்கி எறிந்தார். பாரதியிடம், “மனைவி இருக்கும் போதே இப்படி திருமணம் செய்யக் கூடாது என்று சட்டம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியாதா? என்றாவது ஒருநாள் நீங்கள் திருந்திவிடுவீர்கள் என்று நினைத்தேன்.. ஆனால் இப்படி செய்ய வெட்கமாக இல்லையா?” என்று கேள்விகளை கேட்டார். இதேபோல் வெண்பாவையும் கண்ணம்மா திட்டி தீர்த்து விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் வெண்பாவுக்கு இது சரியான பதிலடி என்று கூறிவருகின்றனர். வெண்பா கதாபாத்திரத்தின் இந்த பின்னடைவு, நாயகி கண்ணம்மாவுக்கு ஏறுமுகமாக அமையுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Also Read | இரட்டை வேடத்தில் காஜல் அகர்வாலின் "காமெடி பேய் படம்... "இப்படி ஒரு கான்செப்ட்டா..".. செம டீசர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kannamma Stops Bharathi Venba Marriage Bharathi Kannamma

People looking for online information on Bharathi kannamma promo, Bharathi Kannamma Serial Today, Bharathi Kannamma Serial today episode will find this news story useful.