www.garudavega.com

ஒரே பங்கமா போச்சே.. வெண்பா, பாரதிக்கு தங்கச்சியா? .. கண்ணம்மாவின் சிறப்பான செய்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி, 01 மார்ச் 2022: பாரதிக்கு வெண்பா தங்கச்சி என கண்ணம்மா ஒரே போடாக போட, கடும் ஆத்திரத்தில் மூழ்கி போயுள்ளார் வெண்பா.

kannamma says venba is the sister of bharathi venba frustrated

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று 'பாரதி கண்ணம்மா'.

இந்த தொடரின் நாயகன் மற்றும் நாயகியான பாரதி, கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

கோபத்தில் பேசிய பாரதி

மேலும், இந்த தம்பதியினரின் குழந்தைகளான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாகவும், மற்றொரு குழந்தை லட்சுமி, கண்ணம்மாவிடம் நேரடி மகளாகவும் வளர்ந்து வருகின்றனர். இந்த தொடரின் சமீபத்திய எபிசோடில், ஹேமா தங்களின் மகள் தான் என கண்ணம்மா தெரிவித்த போதும், நீ திட்டம் போட்டு குழந்தையை பிரிக்கப் பார்க்கிறாய் என கோபத்தில் கூறியிருந்தார் பாரதி.

kannamma says venba is the sister of bharathi venba frustrated

ஒதுங்கிய கண்ணம்மா

அது மட்டுமில்லாமல், ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து அந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வந்த தன்னுடைய அம்மா, அதனை வளர்க்கச் சொன்னதாகவும், அப்படி என் தாய் பொய் கூறியிருந்தால், அவருக்கு மன்னிப்பே கிடையாது என்றும் பாரதி கண்டிப்புடன் தெரிவித்திருந்தார். தன்னுடைய மாமியாருக்கு தவறான பெயர் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், மேற்கொண்டு பாரதியிடம் குழந்தை பற்றி எதுவும் முறையிடாமல் விட்டு விடுவார் கண்ணம்மா.

அதகளம் தான்

இதன் பிறகு, லட்சுமியின் தந்தை யார் என்பது பற்றி, கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் வெடித்த விவகாரம் தொடர்பான எபிசோடுகள், மக்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ, மேலும் அதகளத்தை உண்டு பண்ணியுள்ளது. லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோருடன் பள்ளிக்கூடத்தில், பாரதி, கண்ணம்மா மற்றும் வெண்பா ஆகியோரும் உடனிருந்தனர்.

kannamma says venba is the sister of bharathi venba frustrated

மாறிய வெண்பா முகம்

அப்போது, தலைமையாசிரியரிடம் பேசும் கண்ணம்மா, "இரண்டு குழந்தைகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன். டாக்டர் சாருக்கு நிறைய வேலை இருக்கும். டாக்டர் வெண்பா, பாரதி சாருக்கு தங்கச்சி மாதிரி" என கண்ணம்மா கூற, பாரதி மற்றும் வெண்பா ஆகிய இருவரின் முகமும் மாறிப் போனது.

அண்ணன் - தங்கச்சி

தொடர்ந்து பேசும் கண்ணம்மா, "அவங்களுக்கு நிறைய வேலை இருக்கும்ல. அண்ணன் - தங்கச்சிய நாம் ஏன் சார் தொந்தரவு பண்ணனும். நானே குழந்தைகளை கவனிச்சுக்குறேன்" என ஒரே போடாக போட்டார். தொடர்ந்து, மனதுக்குள் வெண்பாவும் புலம்பிக் கொள்ள, தலைமை ஆசிரியரும் கண்ணம்மா சொல்வதை, பாரதி மற்றும் வெண்பாவிடம் வலியுறுத்துகிறார்.

ஹைலைட் விஷயம்

இறுதியில், வெண்பா மற்றும் கண்ணம்மா ஆகியோர் மாறி மாறி பார்த்துக் கொண்டே இருக்கும் நிகழ்வுகளுடன் முடிவடைகிறது. அண்ணன் - தங்கச்சி என கண்ணம்மா குறிப்பிட்ட விஷயம் தான், தற்போது பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஹைலைட்டாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kannamma says venba is the sister of bharathi venba frustrated

People looking for online information on Bharathi Kannamma, Bharathi Kannamma Episode, Bharathi Kannamma Serial, Promo will find this news story useful.