முன்னதாக, பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீாராம், கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடித்ததால் படத்திலிருந்து விலகியதாக கூறினார். அவர் கூறும் போது "கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடித்ததால் ஒரு படத்தை நிராகரிக்க வேண்டியிருந்தது . நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன் மற்றும் தயாரிப்பாளர்களிடம் என் நிலைப்பாட்டை விளக்கினேன் அவர்கள் புரிந்து கொண்டார்கள். சில நேரங்களில் நமக்கு சரியாக படுவதே சரி. அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று கூறியிருந்தார்.
நடிகை கங்கனா இதற்கு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, "நான் உங்களை போன்ற ஒருவருடன் பணியாற்றும் வாய்ப்பை தவறவிட்டேன். அது முற்றிலும் என் இழப்பு. உங்களுக்கு என்னிடம் என்ன சங்கடம் இருந்தது என்று தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான முடிவை எடுத்துள்ளீர்கள். உங்களுக்கு என் வாழ்த்துக்கள்".
Had to reject a film as it had Kangana Ranaut as the lead .Deep down i felt uneasy and explained my stand to the makers and they were understanding. Some times its only abt what feels right . Wishing them all the best.
— pcsreeramISC (@pcsreeram) September 8, 2020
I missed the opportunity to work with a legend like you sir, it’s entirely my loss, I don’t know what exactly made you uneasy about me but I am glad you took the right call, wish you all the best 🙂🙏
— Kangana Ranaut (@KanganaTeam) September 8, 2020