www.garudavega.com

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்! 'தலைவி' கங்கனா ரனாவத் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் பரவலான ரசிகர்களை கவர்ந்தவர்.

kangana ranaut physical tranformation for thalaivi

சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுமைக்கும் அறியப்பட்டவர். 

kangana ranaut physical tranformation for thalaivi

2008ம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  தற்போது இவர் நடித்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள 'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்காக கனிசமாக 20 கிலோ உடல் எடையை கூட்டி நடித்துள்ளார்.  

kangana ranaut physical tranformation for thalaivi

தலைவி படத்தை இயக்குனர் A.L. விஜய் இயக்குகிறார். எம். ஜி. ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக நாசரும், ஆர். எம். வீரப்பனாக சமுத்திரக்கனியும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

kangana ranaut physical tranformation for thalaivi

இந்த படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

kangana ranaut physical tranformation for thalaivi

இந்நிலையில் கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து 'தலைவி' படத்தில் இருந்த உடலமைப்பையும் , தற்போது நடித்துக்கொண்டிருக்கும் "தகாட்' படத்தின் உடலமைப்பையும் ஒப்பிட்டு பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

 

இந்த பதிவில் உள்ள புகைப்படம் தற்போது வைரலாகிறது

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kangana ranaut physical tranformation for thalaivi

People looking for online information on A L Vijay, G. V. Prakash Kumar, Kangana Ranaut, Thalaivi, Thalaivi Tamil will find this news story useful.