Amala: நடிகை அமலா நீண்ட நாட்கள் கழித்து திரையில் தோன்றவிருக்கிறார். எங்கேயும் எப்போதும் படப்புகழ் சர்வானந்துக்கு அம்மாவாக அமலா நடிக்கும் இந்த திரைப்படத்தின் பெயர் கணம்.
‘கணம்’ திரைப்படம்
அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கணம்’ படத்தில் அமலா அக்கினேனி, சர்வானாந்த், நாசர், ரீத்து வர்மா, சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக சுஜித் சராங், இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய், எடிட்டராக ஸ்ரீஜித் சராங், கலை இயக்குநராக சதீஷ்குமார் உள்ளிட்டோர் பணிபுரிந்துள்ளனர்.
தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்தப் படம் தயாரித்துள்ளது. தெலுங்கில் ‘ஒகே ஒக ஜீவிதம்’ என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் சதீஷ் மற்றும் ரமேஷ் திலக் ஆகியோருக்கு பதிலாக வெண்ணிலா கிஷோர் மற்று ப்ரியதர்ஷி ஆகியோர் நடித்துள்ளனர். இரு மொழிகளில் உருவாகி வரும் ‘கணம்’ - ‘ஒகே ஒக ஜீவிதம்’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அம்மா பாடல்..
இந்த படத்தில் தற்போது ஒரு அம்மா பாடல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒவ்வொரு படத்திலுமே படத்தின் கதையோட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் சில பாடல்கள் அமையும். அந்தப் பாடலைக் கேட்டாலே படத்தின் கதைக்களத்தை நம்மால் உணர்ந்து கொள்ள இயலும். அப்படி தான் இந்த ‘கணம்’ திரைப் படத்தில் ‘அம்மா’ பாடல் உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சித் ஸ்ரீராம் குரலில் உருக வைக்கும் பாடல்
‘எங்கேயும் எப்போதும்’,‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில், நடிகர் சர்வானந்த் நடித்து வெளியாகவுள்ள படம் ‘கணம்’ படத்தில் இட பெற்றுள்ள அம்மா பாடலை பாடலாசிரியர் உமா தேவி எழுதியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த பாடலை, பாடகர் சித் ஸ்ரீராம் தனது குரல் மூலம் பாடி, கேட்பவர்களை உருக வைத்துள்ளார்.
இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும்.
இந்தப் பாடல் உருவான விதம் குறித்து இயக்குநர் ஸ்ரீகார்த்திக் கூறுகையில், “அம்மா பாடல் தான் ‘கணம்’ படத்தின் ஆன்மா. இது கதையை மேம்படுத்தும் பாடல் மட்டுமல்ல, இந்தப் பாடல் தான்.. இந்தப் படம். ஒரு வகையில் இந்தப் படத்தின் முதுகெலும்பு என்று சொல்வேன். 3 வருடங்களுக்கு முன்பு, இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்னரே இந்தப் பாடலை உருவாக்கினோம். இந்தப் பாடலை முடித்தவுடனேயே இது கதையின் தன்மையை இன்னும் சிறப்பானதாக ஆக்குவதை உணர்ந்தோம்.
குசும்புக்கார மச்சினிச்சிங்க.. சிக்கிய Cook With Comali ‘கனி’-யின் கணவர்! Viral அட்ராசிட்டி வீடியோ
இந்த பாடலை கேட்ட பிறகுதான், அடுத்து வரப்போகும் நாட்களில் எந்தப் பார்வையோடு இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை மொத்தக் குழுவும் அறிந்து கொண்டது. படப்பிடிப்பின் போது எல்லோரும் ஒரே நேர்கோட்டில் சிந்திக்க இந்த அம்மா பாடல் தான் உதவியது. தெலுங்கில், மறைந்த பாடலாசிரியர் சிரிவெண்ணெலா அவர்கள் எழுதிய கடைசி பாடல்களில் ஒன்று இது. முதலில் நாங்கள் தெலுங்கு மொழியில் பாடலைத் தயார் செய்திருந்தாலும் அதை தமிழுக்கு அப்படியே மாற்றவில்லை.
‘தோழர் Dolo 650’ இயக்குநர் பகிர்ந்த பிரபல கவிதை!.. இது இன்னுமா trend ஆகிட்டு இருக்கு?
அம்மாவை இழந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு தாலாட்டாக இருக்கும். மற்றவர்களுக்கும் ஒரு நம்பிக்கை தரும் பாடலாக இது இருக்கும்” என்று அவர் தெரிவித்தார். பாடலைக் கேட்டவர்கள் அனைவருமே தனது அம்மாவை ஞாபகப்படுத்துவதாக தெரிவித்தார்கள். அதற்காகத் தான் இந்தப் பாடலை நிறைய நாட்கள் மெனக்கிட்டு உருவாக்கியுள்ளோம்” என்று தெரிவித்தார். தற்போது வெளியாகியுள்ள ‘அம்மா’ பாடல் சமூக வலைதளத்தில் பலரும் கேட்டுவிட்டு, தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். பலரும் ‘கணம்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அம்மா பாடலை பகிர்ந்த மகன்
நடிகையும் நடிகர் நாகார்ஜூனா அக்கினேனியின் மனைவியுமான அமலா அக்கினேனி நடித்துள்ள இந்த படத்தின் இந்த அம்மா பாடலை அமலாவின் மகன் அகில் அக்கினேனி வெளியிட்டுள்ளார். அதனை ரீட்வீட் செய்த அமலா, “நன்றி மகனே லவ் யூ.. அத்துடன் இப்படத்தின் மூலமாக எனக்கு சர்வானந்த் என்கிற இன்னொரு மகன் கிடைத்துவிட்டான்!” என நெகிழ்ந்துள்ளார்.
So happy to realease the song Amma from #OkeOkaJeevitham. Absolutely heart touching. This is golden. I dedicate this song to my dear mother. All the best to the whole team.https://t.co/uuVe4sfPY8@amalaakkineni1 @ImSharwanand
— Akhil Akkineni (@AkhilAkkineni8) January 26, 2022