கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 , ஏப்ரல் 21 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகிறது.
சென்னை, ஏப்ரல் 10, 2023: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 வெளியீட்டுத் தேதியை, ஒரு அழகான புரமோ வீடியோ மூலம் அறிவித்துள்ளது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முதலில் ஒளிபரப்பப்பட்ட 'கனா காணும் காலங்கள்' தொடர், சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்பட்ட, ஒரு கிளாசிக் தொடராகும்.
அனைவராலும் விரும்பப்பட்ட இந்த பிரபலமான நிகழ்ச்சி, கடந்த ஆண்டு டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸாக புதிய அவதாரத்தில் மீண்டும் வந்தது. புதிய நடிகர்கள் மற்றும் நவீனக் கால கதைக்களத்தில் அட்டகாசமாக எடுக்கப்பட்டிருந்த இந்த சீரிஸ், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
Podra Vediya Coz We are back!🔥 #KanaKaanumKaalangalSeason2 Streaming From April 21#ReturnofKanaa #DisneyPlusHotstar pic.twitter.com/3o8XfFocMf
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) April 10, 2023
தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் சீசன் 2 , வரும் ஏப்ரல் 21 முதல் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. சீசன் 1 முடிவடைந்த இடத்திலிருந்து இரண்டாவது சீசன் தொடர்கிறது. இந்த புதிய சீசனில் சிறகுகள் மாணவர்களிடமிருந்து காதல், சந்தோஷம், ஏக்கம், என அத்தனை உணர்வுகளையும் ரகிகர்கள் இரண்டு மடங்காகப் பெறுவார்கள்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.