விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் பிக்பாஸ் வீட்டைவிட்டு எலிமினேட் ஆகும் முதல் போட்டியாளரை கமல்ஹாசன் அறிவித்திருக்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் முதல் நாள் 18 பேர் இணைந்தனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் 15 நாள் கடந்து ஹவுஸ்மேட்ஸ் வசித்து வருகின்றனர். நமீதா மாரிமுத்து முன்னதாக தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனைத் தொடர்ந்து 15 போட்டியாளர்கள் இருந்த நிலையில், இவர்களுல் பிக்பாஸ் வீட்டை வெளியேறும் போட்டியாளர், இதர போட்டியாளர்கள் மற்றும் மக்களால் நாமினேட் செய்யப்பட்ட வந்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நாமினேஷன் லிஸ்ட் பிரகாரம் நடிகர் கமல்ஹாசன் அகம் டிவி வழியே போட்டியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது யார் என்கிற கேள்விக்கு பதிலாக, தன் கையிலிருந்த பேப்பரை எடுத்து மக்களுக்கு கமல் காட்டினார். அதில் நாடியா என்று எழுதியிருந்தது.
மலேசிய தமிழரான நாடியா சாங் தன்னுடைய அம்மாவின் தொடர்ச்சியான துன்புறுத்தல்கள், வறுமை, படிக்க இயலாத சூழ்நிலை, இளம் வயதில் வேலைக்கு செல்லுதல் என எல்லாவற்றையும் கடந்து அழகுத் துறையில் சாதித்ததாகவும், அதற்கு தன்னுடைய காதல் கணவர் சாங் என்கிற சைனீஸ் மனிதர் பக்கபலமாக இருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் இருந்து காணாமல் போனவர்கள் பட்டியலில் நாடியா மற்றும் சின்ன பொண்ணு ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இது குறித்து பேசிய நாடியா, “காணாமல் போனவர்கள் லிஸ்டில் நான் கவனிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் என்றால், நான் காணாமல் போகவில்லை, நான் கவனிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறேன்!” என்று தானே அர்த்தம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து நாடியா வெளியேறினார். அவருக்கு வலிமையான வார்த்தைகளை உருக்கமாகக் கொடுத்து ஹவுஸ் மேட்ஸ் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தனர்.
அவரை பிக்பாஸ் மேடைக்கு வரவேற்ற கமல், “முன்னாடியா வாங்க நாடியா என்று நான் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு முன்னாடி வீட்டை விட்டு வெளியில் வந்துட்டீங்களோ?.. இதை நெகடிவாக எடுத்துக்கொள்ளாமல் லட்சோபலட்சம் பேர் உங்களை கண்டுகொண்டுவிட்டார்கள் என்கிற புகழுடன், வீட்டில் உங்களை மிஸ் பண்ணும் குழந்தைகளை சென்று பாருங்கள்” கூறினார்.
நாடியா கூறும்போது, “நான் இங்கு வந்த பின் நெகடிவாக எண்ணியதை நிறுத்திக்கொண்டேன்.” என்று கூறினார். மேலும் நாடியாவின் கணவரை விசாரித்ததாக கமல்ஹாசன் சீன மொழியில் பேசினார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் நாடியா வாழ்ந்த தருணங்கள் தொகுக்கப்பட்டு குறும்படமாக ஒளிபரப்பப் பட்டது.