தமிழில் தற்போது பிக்பாஸ் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் முழுக்க முழுக்க பல திருப்புமுனைகளுடன் தான் இந்த நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது.
Also Read | "அவளை மறக்கத் தான்".. ஆதித்த கரிகாலனாக மாறி Dialogue பேசிய சிறுவன்.. விக்ரம் பகிர்ந்த Cute வீடியோ..
விறுவிறுப்பு நிறைந்து பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் ரசிகர்களும் இதனை அதிகம் ஆவலுடன் பார்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக ஜிபி முத்து வெளியேறி இருந்தார். தனது குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தில் ஜிபி முத்து இந்த முடிவை எடுத்து தானாக வெளியே போனார். இதனைத் தொடர்ந்து, சாந்தியும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற தொடர்ந்து அடுத்த வாரத்தில் அசல் கோலார் வெளியேறி இருந்தார். இதன் பின்னர், சமீபத்தில் நடந்து முடிந்த எபிசோடில் போட்டியாளர் ஷெரினா எலிமினேட் ஆகி இருந்தார்.
இந்த நிலையில், போட்டியாளர்கள் மத்தியில் கமல் ஆவேசமாக பேசி இருந்த விஷயங்கள், பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக வரும் போது அனைவரும் சரிவர பின்பற்ற சில விதிமுறைகள் உள்ளது. உதாரணத்திற்கு தமிழ் மொழயில் மட்டும் பேசுவது, பாத்ரூம் செல்லும் நேரம் தவிர மற்ற நேரத்தில் மைக்கை கழற்றக் கூடாது உள்ளிட்ட பல விதிகள் உள்ளது.
ஆனால், சிலர் இதனை சரிவர பின்பற்றவில்லை என்பது குறித்து ரசிகர்கள் அவ்வப்போது கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இதனிடையே, இந்த சம்பவம் குறித்து போட்டியாளர்களிடமே நேரடியாக கமல் பேசி இருந்தார்.
"மக்களிடம் உங்களை நிரூபித்து கொள்வதற்கான மேடை இது. ஒரு பெரிய வாய்ப்பு. ஆனால் பலரும் அசால்டாக இருக்கிறீர்கள். நீங்கள் நிகழ்ச்சிக்கு உபகாரம் செய்யவில்லை. நான் உட்பட ஒவ்வொருவருக்கும் சம்பளம் தருகிறார்கள். ஒவ்வொருவரும் அவர்களின் வேலைகளை சரியாக செய்யுங்கள். விதிகள் மீறினால் ரெட் கார்ட் கொடுக்க கூட எனக்கு உரிமை உள்ளது. ஆனால் இதுவரை நான் அப்படி செய்ததில்லை.
கலைஞர்கள் வளர வேண்டும் என்று நினைக்கிறவன் நான். பல சிறந்த கலைஞர்கள் சின்ன சின்ன காரணங்களால் கூட தொலைந்து போயிருக்கிறார்கள். எனக்கு எல்லாம் இப்படி ஒரு வாய்ப்பு அந்த சமயத்தில் கிடைக்கவில்லை என தோன்றி உள்ளது. என் தகுதிக்கும் அப்பால் மக்கள் புகழ் தந்துள்ளனர். எனக்கே அப்படி தோன்றும் போது நீங்கள் எப்படி இருக்க வேண்டும்?.
இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் ஏன் உங்களுக்கு புரியவில்லை?. மைக் போடாம இருக்கிறீங்க, ரகசியம் பேசிக்குறீங்க. வேறு மொழியில் பேசுறீங்க. டாஸ்க்கிற்கு வர சொன்னால் தாமதமாக வருகிறீர்கள். பெட் ரூம் கூட படு மோசமாக உள்ளது. சுத்தமாகவே இல்லை. இப்போது கூட பரவாயில்லை. நான் பார்த்த போது படு மோசமாக இருந்தது. நீங்கள் பயன்படுத்தும் பெட்டை சுத்தமாக ஏன் வைத்திருக்க முடியவில்லை?.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை எல்லாம் நீங்கள் உடைக்க கூடாது. இந்த வீட்டிற்கு நீங்கள் விருந்தினர் தான். ஒருத்தர் செய்தார் என அனைவரும் செய்ய நினைத்தால் உங்களுக்கான பொருளை தான் நீங்கள் உடைக்கிறீர்கள்" என கமல் கூறினார். முன்னதாக, வீட்டிற்குள் கிளாஸ் ஒன்றை ஜனனி உடைத்திருந்ததை குறிப்பிட்டு கமல் பேசி இருந்தார்.
தொடர்ந்து பேசிய கமல், "முப்பது நாட்கள் ஆகியும் இது தொடர்கிறது. இது கவனக்குறைவு இல்லை, அலட்சியம். இனியும் இவற்றை நினைவு படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள். இது சீரியஸ் வார்னிங். எனக்கு கோவிட் வந்த சமயத்தில் ஹாஸ்பிடலில் இருந்து கூட பேசி உள்ளேன். ஆனால் உங்களுக்கு அலங்கார மேடையில் இருந்து வருவதற்கு தாமதம் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது" என ஆவேசமாக போட்டியாளர்கள் செயல்பாடு குறித்து கமல்ஹாசன் பேசி உள்ளார்.
Also Read | Bigg Boss வரலாறுலயே இப்டி ஒரு Elimination நடந்ததில்ல.. பரபரப்பை ஏற்படுத்திய கடைசி நேர ட்விஸ்ட்..!!