நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் விக்ரம் வசூல் பற்றி மறைமுகமாகப் பேசியுள்ளார்.
Also Read | “அவங்க நடிப்பு ராட்சசி…” டிரைலர் பார்த்து பாராட்டிய கமல்… உற்சாகமான ‘செம்பி’ படக்குழு
விக்ரம் வெற்றி…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
பிறமொழிகளில் வெற்றி…
தமிழைப் போலவே மலையாளம் மற்றும் தெலுங்கு வெர்ஷனிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் நடந்த வெற்றிவிழாவில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் கலந்துகொண்டனர். விக்ரம் திரைப்படம் தற்போது இரண்டாவது வாரத்திலும் வெற்றிநடை போட்டுவருகிறது. படத்தின் வசூல் குறித்து பலவாறு தகவல்கள் வெளியாகிவருகின்றன. தமிழில் படத்தை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் நம்ப முடியாத வெற்றி என்று டிவீட் செய்திருந்தார்.
விக்ரம் வசூல் பற்றி கமல்…
இந்நிலையில் நேற்று ரத்த தான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கமல் மறைமுகமாக விக்ரம் வசூல் பற்றி பேசியுள்ளார். அவர் பேச்சில் “எல்லோரும் நான் மீண்டும் சினிமாவில் நடிக்கப் போய்விட்டதாக விமர்சிக்கிறார்கள். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை. சினிமா என் தொழில். நான் சொல்லும்போது முதலில் யாரும் புரிந்துகொள்ளவில்லை. என்னை நடிக்கவிட்டால் 300 கோடி சம்பாதிப்பேன் என்று சொன்னபோது, பலரும் ‘இவர பாருங்க மார்தட்டிக்குறாரு’னு பேசுனாங்க. இதோ வந்துட்டுருக்கு (விக்ரம் படத்தின் வசூலைக் குறிப்பிட்டு). நான் நடிச்சா என் கடன அடைப்பேன். என் வயிறார சாப்பிடுவேன். என்னால் முடிந்ததை உதவுவேன்” எனப் பேசியுள்ளார்.
Also Read | சிகிச்சைக்காக இன்று அமெரிக்கப் பயணம்….Airport-ல் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் TR