சென்னை எழும்பூர் மிடில்டன் வீதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நீலம் பண்பாட்டு மையத்தின் புத்தக விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பா.ரஞ்சித், தெருகுரல் அறிவு உள்ளிட பலரும் பங்கேற்றனர்.
Images are subject to © copyright to their respective owners
மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் புத்தக விற்பனை நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இயக்குனர் பா. ரஞ்சித், நேராக கமல்ஹாசனை சந்தித்து அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்து பேசி இருந்த கமல்ஹாசன், "உறவே, உயிரே, தமிழே வணக்கம். இதுதான் என் வாழ்க்கையின் உண்மை தத்துவம். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை, தேவை. நானும் இயக்குனர் பா.ரஞ்சித்தும் இல்லாத காலத்திலும் இருக்கப் போகும் ஒரு தாக்கம் இந்த புத்தக விற்பனை நிலையம்.
அரசியல் என்பது தனியாகவும் கலாச்சாரம் என்பது தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நாம் உருவாக்கியது தான் அரசியல். மக்களுக்கானது தான் அரசியல். அதை திருப்பி போட்டு தலைகீழாக பிடித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சி, ஆள்பவர்கள் என்ற வார்த்தையை இனி வரக்கூடாது.
Images are subject to © copyright to their respective owners
நாம் நியமித்தவர்கள் என்ற எண்ணம் மக்களுக்கு வரும் பட்சத்தில் ஜனநாயகம் நீடூடி வாழும். அப்படி இல்லாமல் தலைவனை வெளியே தேடிக் கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் குடிமக்களாக உள்ளனர். அவர்கள் தன்னளவில் தலைவர்கள் என்பதை உணரும் பட்சத்தில் உலகின் பெரிய ஜனநாயகம் ஆக இந்தியா வரக்கூடும்.நான் அரசியல்வாதியான பிறகு சில சமரசங்கள் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
என்னையும் உங்களில் (நீலம்) ஒருவனாக சேர்த்துக் கொண்டதில் பெருமை. Spelling வேண்டுமானால் வேறாக இருக்கலாம், ஆனால் மய்யமும் நீலமும் ஒன்றுதான்" என கமல் பேசினார்.
இதே போல இயக்குனர் பா. ரஞ்சித் பேசுகையில், "புத்தகங்கள் தான் என்னை சினிமா நோக்கி நகர்த்தி சென்றது. புத்தகங்கள் படிக்கும்போது உலக ஆளுமைகள் மீது ஆர்வம் இயல்பாக வந்துவிடும். அப்படி ஒரு ஆளுமையாக தான் கமல்ஹாசனை பார்க்கிறேன். கமல்ஹாசனின் திரைப்படங்களை பிரித்தாலே சினிமாவின் வளர்ச்சியை எளிதாக புரிந்து கொள்ள முடியும். கமலின் எழுத்துப் பாணியை பார்த்து நான் வியக்கிறேன்.
Images are subject to © copyright to their respective owners
வியாபார நோக்கத்தில் மட்டுமில்லாமல் ஒரு கலைஞனாக கலாச்சார இடைவெளியை சரியாக பயன்படுத்தியவர் கமல்ஹாசன். அம்பேத்கரை படித்த பிறகு தான் நான் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கான பதிலாக தான் இந்த புத்தக நிலையங்கள் என் திரைப்படங்கள் உள்ளது. புத்தகங்கள் அடிமை சிந்தனையை மாற்றும்" என பேசி இருந்தார்