ஜூன் 4, 1946-ஆம் ஆண்டு பிறந்தவர் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம். தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர்.
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான பல படங்களில் கமலுக்கான பாடல்களை எஸ்பி பாலசுப்ரமணியம் பாடினார். கமல் பாடுவது போலவே தொனிக்கும் அந்த பாடல்களில் எஸ்பிபியின் குரல் இருப்பதையே பலர் மறந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு கமலின் படங்களுக்கு எஸ்பிபியின் குரல் கச்சிதமாக பொருந்தும்.
கடந்த வருடம் 2020 செப்டம்பர் 25-ஆம் தேதி எஸ்பிபி கொரோனாவால் மறைந்தார். எஸ்பிபியின் மறைவு இந்திய அளவில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இசைத்துறைக்கு மிகப்பெரும் இழப்பாகவும் கருதப்பட்டது. இந்நிலையில் தான் பலரும் எஸ்பிபியின் 75வது பிறந்த நாளான இன்று பலரும் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், “அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள்.
அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ pic.twitter.com/2Zs7j0pRTs
— Kamal Haasan (@ikamalhaasan) June 4, 2021
ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. ‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு’..” என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: அட.. டைரக்டர் முருகதாஸா இது? அப்பவே இப்படி நடிச்சுருக்காரே? அவரே பகிர்ந்த வைரல் வீடியோ!