‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.
தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை பிரபல வினியோகஸ்தர்களான AP International நிறுவனம் மிகப்பெரிய சாதனை விலைக்கு வாங்கி உள்ளனர். மேலும் விக்ரம் படத்தின் அமெரிக்கா உரிமையை பிரைம் மீடியா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படம் அமெரிக்காவில் மட்டும் 891 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தமிழ் மொழியில் 415 திரையரங்குகளிலும், தெலுங்கு மொழியில் 326 திரையரங்குகளிலும், இந்தி மொழியில் 150 திரையரங்குகளிலும் ரிலீஸ் ஆனது.
டிக்கெட் முன்பதிவில் மட்டும் விக்ரம் படம், 250 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களில் விக்ரம் படம் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் அமெரிக்காவில் 11.65 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.
#Vikram roars past $1.5M with early sunday gross
Top 5 in USA this wknd#VikramHitlist #VikramInAction pic.twitter.com/wJGMFrilEr
— PrimeMedia (@PrimeMediaUS) June 5, 2022