பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் இதுவரையில் மூன்று பேர் எலிமினேட் ஆகியுள்ளனர்.
முதலாவதாக நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து முறையாக எலிமினேட் ஆகியவர்கள் நாடியா, அபிஷேக், சின்னபொண்ணு ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். தற்போது அடுத்த எலிமினேஷன் யார் என்கிற கேள்வி பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதில் ராஜூ மற்றும் அண்ணாச்சி நாமினேட் ஆகியிருந்தனர்.
ராஜூ குறித்து, அவரை நாமினேட் செய்தவர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கேட்டபோது, அவருக்கு பதில் அளித்த பாவனி, தாமரை என ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை கூறி இருந்தனர். அதாவது முகத்துக்கு நேராக விமர்சனங்களைச் செல்பவர்களா? என்கிற லிஸ்டில் இமான் மற்றும் ராஜூ இருவரும் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர்.
அதில் இருவர் மீதும் முகத்துக்கு நேரே எதையும் இவர்கள் சொல்வதில்லை என்கிற கருத்தை பலர் முன் வைத்தனர். இதில் தாமரை சொல்லும்பொழுது ராஜூ, தன்னை நாமினேட் செய்ததால், தான் வருத்தமாக இருந்ததாகவும், அதனால் ராஜூவை நாமினேட் செய்த தாகவும் குறிப்பிட்டார். இதற்கு கமல்ஹாசன், “அப்போ இது பழிவாங்கும் நடவடிக்கையா?” என்று கேட்டார்.
பாவனி சொல்லும்போது ராஜூ, “எந்த சண்டை வந்தாலும் பெரிதாக பேசமாட்டார். அவருடன் சண்டை வந்தாலும் கூட அவர் அதை நேரடியாக எதிர்கொண்டு பேசி முடிவுக்கு கொண்டு வருவது இல்லை. அவருக்கு தைரியம் இல்லையா அல்லது சண்டை வேறு எப்படியாவது சென்றுவிடுமோ என்று பயப்படுகிறாரா?” என்று தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இதேபோல் இசைவாணி சொல்லும் பொழுது, ராஜூ தனித்தன்மையை இழந்து விட்டதாக குறிப்பிட்டார். எல்லாவற்றையும் கேட்டு, பின்பு கமல்ஹாசன் கூறும் பொழுது, “உள்ளே இருக்கும் கருத்துக்கும் வெளியே இருக்கும் கருத்துக்கு மிகப்பெரிய வித்தியாசம் உண்டு என்பதற்கு உதாரணம் ராஜூ காப்பாற்றப்பட்டது தான்!” என்று கூறினார்.
மேலும் ராஜூவிடம் பேசிய கமல், “என்னுடைய புரிதல் உங்கள் கருத்தை நீங்கள் முன்வைக்காமல் இல்லை. உங்கள் பேச்சில் நீங்கள் நகைச்சுவையை சேர்த்துக்கொண்டது தைரியம் இன்மை காரணமாக அல்ல. இன்னும் சொல்லப்போனால் பண்புடன் இருக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் அதில் இருக்கிறது என நினைக்கிறேன்.
அனைவரும் தனக்கு மருந்தே கொடுக்கவில்லை, இவர் என்ன வைத்தியர்? என்று உங்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் நீங்கள் மருந்தைத் தேனில் குழைத்து கொடுத்து இருக்கிறீர்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. அது தவறோ, சரியோ.. சொல்கிற விமர்சனத்தை நகைச்சுவையுடன் சொல்லும் எண்ணம் நல்ல எண்ணம். இமான் அண்ணாச்சியும் அப்படிதான் சொல்கிறார் என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
அதேசமயம் இமான் அண்ணாச்சி காப்பாற்றப்படுகிறாரா? வெளியேற்றப்படுகிறாரா? என்பது குறித்து இன்றைய எபிசோடில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.