முன்ன ஆட்டத்தப் பாத்தோம்… இப்போ ஆண்டவர் ஆக்ஷன்- வெளியான கொல மாஸ் விக்ரம் போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Kamal lokesh Vikram movie new mass poster released

Also Read | ”தளபதி 66 ஷூட்டிங்கில் சரத்குமாருடன் நானா?”… வைரல் photo-வுக்கு விளக்கமளித்த நடிகர் மனோபாலா!

விக்ரம்…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு  ‘விக்ரம்’ உருவாகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதனால் இந்த படத்தின் மீது எக்கச்சக்கமாக எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இதையடுத்து விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Kamal lokesh Vikram movie new mass poster released

வைரலான ‘பத்தல பத்தல’…

இந்த படத்தின் மூலம் இரண்டாவது முறையாக கமல்- அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படம் உருவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பத்தல பத்தல’ பாடல் மே 11 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியானது. இந்த பாடலைக் கமலே எழுதிப் பாடியுள்ளார். இது கமல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், பாடல் வெளியான பின்னர் சமூகவலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Kamal lokesh Vikram movie new mass poster released

பாடலில் கமல் தனது பாணியில் வடசென்னை தமிழில் பாடியதும், சில அரசியல் கருத்துகளும் கவனிக்கும் அம்சமாக அமைந்தன. வெளியாகி தற்போது வரை 15 மில்லியன் பேருக்கு மேல் இந்த பாடலை யுடியூபில் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் பாடலின் நடுவே கமலின் நடன மூவ்மெண்ட்கள் இப்போது ரசிகர்களால் ஆடி ரீல்ஸ் வீடியோக்களாக வெளியாக ஆரம்பித்துள்ளன.

ஆண்டவர் ஆக்ஷன்…

இந்நிலையில் ஆடியோ மற்றும் பாடல்கள் ரிலீஸூக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் தற்போது விக்ரம் படத்தின் மாஸான போஸ்டர் ஒன்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கும் கமல், விஜய்சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூவரும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளனர். கமல் கையில் துப்பாக்கியோடு தோற்றமளிக்கும் இந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கசக்கமாக எகிற வைத்துள்ளது.

Kamal lokesh Vikram movie new mass poster released

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal lokesh Vikram movie new mass poster released

People looking for online information on Anirudh Ravichander, Fahadh, Kamal Haasan, Lokesh Kanagaraj, Vijay Sethupathi, Vikram Movie, Vikram movie new mass poster will find this news story useful.