கடந்த 1996-ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கா் கூட்டணியில் வெளியானப் படம் இந்தியன்.
Also Read | அட்லி - ஷாருக்கானின் 'ஜவான்' படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்! அவரே சொன்ன மாஸ் தகவல்
ஊழல், லஞ்சம் ஆகிய குற்றங்களை எதிர்க்கும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் மற்றும் சுகன்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார், ஜீவா ஒளிப்பதிவு செய்தார்.
1996-ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான விருதுக்கு 'இந்தியன்' படம், இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன்-2 படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வந்தது. இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
கடந்த 2019 ஜனவரி மாதம் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. பின் சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின் நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தில் நடித்தார். விக்ரம் படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கமல்ஹாசன் இந்தியன் 2 படம் மீண்டும் துவங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று இயக்குனர் ஷங்கரின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் "‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்." என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
‘இந்தியன்’ என்பதில் பெருமிதம் கொள்வோம்; இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்வோம்! பிரமாண்ட திரைப்படங்களால் இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த இயக்குனர் @shankarshanmugh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2022
Also Read | மோகன்லாலின் லூசிபர் படத்தின் 2ஆம் பாகம்.. இயக்குனர் பிரித்வி ராஜ் கொடுத்த அப்டேட்! வைரல் Photo