சென்னை: தங்களது திரையரங்குக்கு 42 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் வந்தது பெருமையாக இருப்பதாக அந்த திரையரங்கின் உரிமையாளர் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தத கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அந்நிகழ்ச்சி முடிந்த நிலையில், உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார். கொரோனாவின் மூன்றாம் அலையில் பலரும் சிக்கி வருவதால் குறைந்த அளவு ஆட்களை மட்டும் வைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், ஷிவானி உள்ளிட்டோர் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. ஆக்ஷன் டிராமாவாக உருவாகி வரும் விக்ரம் படம் வரும் 2022 மார்ச் 31 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த டான்ஸ் ஸ்டெப் எப்படி இருக்கு? புஷ்பா படத்தின் சமந்தா பாடல்! வெளியான புதிய BTS வீடியோ...
வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு ஷிவானி நாராயணன், மைனா நந்தினி ஆகியோர் ஜோடிகளா எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் வெற்றி தியேட்டரில் நேற்று படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, அங்கு கமலை பார்த்த மகிழ்ச்சியில் தியேட்டரின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள செய்தி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ராகேஷ் தனது சமூகவலைதள பக்கத்தில், "பத்மஸ்ரீ டாக்டர் கமல் ஹாசன் அவர்கள் விக்ரம் பட ஷூட்டிங்கிற்காக இன்று வெற்றி தியேட்டருக்கு வந்ததில் பெருமை கொள்கிறோம். கடந்த முறை அவர் 1979ம் ஆண்டு நடந்த கல்யாணராமன் படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள இங்கு வந்தார். படப்பிடிப்பு நடத்த எங்களது தியேட்டைதேர்வு செய்ததற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜிற்கு" நன்றி தெரிவித்துள்ளார்.
பரபரப்பான பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. ஐதராபாத்தில் இருந்து வெளியான சர்ப்ரைஸ் ஃபோட்டோ!
கமலின் பழைய புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர், 'வெற்றி தியேட்டரில் கல்யானராமன் 106 நாள்ஓடுச்சு நிறைய நைட்ஷோ திரும்ப திரும்பபார்த்திருக்கேன் ஆயிரம்பேர் அமர்ந்துபார்க்கும் தியேட்டரா இருந்தது அது ஒருபொற்காலம்' என்று ஒருவர் பகிர்ந்துள்ளார்.
பேய் படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்த கல்யாணராமன் திரைப்படம் குடும்பங்களை ரசித்து மகிழ்வித்து வெற்றி பெற்றது. கமல்ஹாசனின் திரைமதிப்பைப் பெரிய சந்தை மதிப்புக்கு மடைமாற்றியதில் கல்யாணராமன் திரைப்படத்திற்குப் பெரும்பங்கு உண்டு. பேய்ப்படம்போல் திகிலாக எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பிருந்த கதையை நகைச்சுவைத் திக்கில் நகர்த்தியது அன்றைக்குப் புதிதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.