தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் பல்துறை வித்தகராகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் கமல்ஹாசன்.
Also Read | கடற்கரையில் பிங்க் பிகினியில் விளையாடிய ஸ்ரேயா.. அடிக்கிற வெயிலுக்கு இதான் தீர்வு
2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் கமல் நடிப்பில் வெளியானது. அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து, அவரின் அடுத்த படமாக விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக விக்ரம் படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தார் லோகேஷ். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கொரோனா பாதிப்புகளால் அவ்வப்போது படப்பிடிப்பில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி, 5 மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது. தமிழகத்தில் முன்னணி வினியோக நிறுவனமான ரெட் ஜெய்ண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில் விக்ரம் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யும் சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழ் மொழியில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும், மலையாள மொழியில் ஏசியா நெட் சேனலும், இந்தியில் ஸ்டார் கோல்ட் சேனலும், கன்னட மொழியில் ஸ்டார் சுவர்ணா சேனலும், தெலுங்கு மொழியில் ஸ்டார் மா சேனலும் கைப்பற்றி உள்ளனர்.
இதனை படத்தயாரிப்பு நிறுவனம் RKFI அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விக்ரம் படத்தின் ப்ரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் போஸ்டர் விளம்பரங்கள் வரையப்பட்ட ரயில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு சில நாட்கள் முன்னர் சென்றது கவனத்தை ஈர்த்தது. விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8