உலகின் மிக பெரிய திரையில் விக்ரம் படத்தின் ஒரு நிமிட முன்னோட்டம் திரையிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக வரும் ஜூன்-3 அன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது.
விக்ரம் படம், CBFC உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகிறது. விக்ரம் படத்தின் தெலுங்கு பதிப்புக்கு "விக்ரம் ஹிட் லிஸ்ட்" என பெயரிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
படத்தின் வெளியீட்டை ஒட்டி கமல்ஹாசன் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். குறிப்பாக கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி, ஐதராபாத் முன் வெளியீட்டு விழா, கோலாலம்பூர் நிகழ்ச்சி, மும்பை முன் வெளியீட்டு விழா என பல நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
இன்று ஜூன் 1 ஆம் தேதி துபாயில் உள்ள உலகின் மிக பெரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் விக்ரம் படத்தின் முன்னோட்டம் இரவு 9:40 மணி அளவில் திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ & போட்டோக்கள் வேகமாக இணையத்தில் பரவி வருகின்றன.
பத்தல பத்தல பத்தல ஆண்டவரே🔥🔥😍
மறுக்கா போட சொல்லுங்க @ikamalhaasan#vikram pre release event at #BurjKhalifa 🔥@RKFI @Dir_Lokesh @VijaySethuOffl @Suriya_offl @anirudhofficial pic.twitter.com/K22ZfHwe7L
— Tamil Spaces (@TamilSpaces) June 1, 2022