விக்ரம் படத்தின் ஆஸ்திரேலியா நாட்டின் வசூல் நிலவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
Also Read | ரஜினிகாந்தை சந்தித்த தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட முன்னணி தயாரிப்பாளர்.. இதான் காரணமா?
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.
‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன் 3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. நடிகர் சூர்யா ரோலக்ஸ் எனும் பெயரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.
விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் சுற்றுப்புற தீவுகளில் வசூலான தொகை குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி விக்ரம் படம் ஆஸ்திரேலியாவில் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. முதல்முறையாக கமல்ஹாசன் நடித்த ஒரு திரைப்படம் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது தமிழ் படம் விக்ரம் ஆகும். இதற்கு முன் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த 2.0 திரைப்படம் தான் 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆஸ்திரேலியா நியூசிலாந்து நாட்டில் வசூலித்த தமிழ் திரைப்படமாகும்.
Also Read | ரஜினிகாந்த் - நெல்சன் - அனிருத் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங் எப்போ? தெறியான EXCLUSIVE அப்டேட்!