'விக்ரம்' படத்தின் FDFS காட்சி டிக்கெட் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
Also Read | KGF யாஷ் கூட நடிக்க சான்ஸ் கெடச்சா எப்படி இருக்கும்? ஆசையை வெளிப்படுத்திய பிரபல நடிகை!
"விக்ரம்" படத்தை, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இதனை முன்னிட்டு விக்ரம் படம், CBFC உறுப்பினர்கள் மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம், கமல்ஹாசனின் புதிய போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர். விக்ரம் படம் 173 நிமிடங்கள் (2 மணி நேரம் 53 நிமிடங்கள்) ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் டிக்கெட் முன் பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் சென்னையில் அதிகாலை காட்சிகள் 500 ரூபாய், 200 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மதுரையில் விக்ரம் படத்தின் FDFS டிக்கெட் விலை அதிகாலை 4 மணி காட்சிக்கு 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில திரையரங்குகளில் 6 மணி & 6.30 மணிக்காட்சிகளுக்கு 200 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பெங்களூர் & ஐதராபாத், NCR பகுதிகளில் அதிகாலை 5 மணிக்கு மேல் உள்ள காட்சிகளுக்கு ரூ 120,150,200 என கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், மற்ற 7மணிக்கு பிறகான காட்சிகளுக்கு 120, 155, 190 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Also Read | கங்கனா ரனாவத் நடிக்கும் 'எமர்ஜன்சி' திரைப்படம்.. BTS போட்டோவுடன் வெளியான முக்கிய அப்டேட்!