RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | 'தங்கலான்' ஷூட்டிங்கில் மாளவிகா மோகனன்.. சீயான் விக்ரம் எடுத்த சூப்பர் போட்டோ! TRENDING
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
Images are subject to © copyright to their respective owners.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.
Images are subject to © copyright to their respective owners.
RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த படம் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.
Images are subject to © copyright to their respective owners.
ஆஸ்கார் விருது விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை மார்ச் மாதம் 13 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விருது விழாவில் ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதை நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது. இசையமைப்பாளர் கீரவாணி & பாடலாசிரியர் சந்திரபோஸ் விருதை பெற்றுக் கொண்டனர். விருது பெற்ற கலைஞர்களையும் படக்குழுவினரையும் வாழ்த்தி கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அதில், "நாட்டையே ஆட வைத்த பாடலுக்கு உலகளாவிய உச்சபட்ச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஓர் இந்தியனாகவும், சக கலைஞனாகவும் உங்கள் சாதனையை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
கீரவாணிக்கும் ராஜமௌலிக்கும் RRR அணியினருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகள்." என கமல் ட்வீட் செய்துள்ளார்.
My hearty congrats to Mr. Keeravaani, Mr. Rajamouli and the fabulous team of @RRRMovie . One more prestigious American recognition for our talented Indian artiste. #NaatuNaatu @mmkeeravaani @ssrajamouli https://t.co/j2iwtRR3BB
— Kamal Haasan (@ikamalhaasan) March 13, 2023
Also Read | OSCARS: "அடடே.. ரொம்ப அழகா இருக்கீங்க".. தீபிகா படுகோனை புகழ்ந்து தள்ளிய கங்கனா ரனாவத் 😍..!