சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 40 ஆண்டு விழாவில் கலந்துகொண்டு அரசின் புதிய கல்வி கொள்கையை விமர்சித்து பேசினார். இவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
மேலும் தமிழக அரசியல் பிரபலங்களான் எச்.ராஜா, தமிழிசை, கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் சூர்யாவின் கருத்தை வன்மையாக கண்டித்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவ/ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள்.
எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவிற்கு உண்டு. புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துக்கள் பலவற்றில் எனக்கு உடன்பாடு உண்டு.
மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற வரைவு அறிக்கை மீது கருத்து சொன்னதற்காக, சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப்போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு'' என்று தெரிவித்தார்.
அன்புத் தம்பி @Suriya_offl அவர்களுக்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு. pic.twitter.com/8chbBdQ3hM
— Kamal Haasan (@ikamalhaasan) July 16, 2019