சினிமாவில் A to Z தெரிந்து வைத்திருக்கும் ஜாம்பவான்களில் கமல்ஹாசனும் ஒருவர். நடிப்பிலும் இயக்கத்திலும் யாரும் செய்ய முடியாத சாதனைகளை செய்த அவர் தனது அரசியல் முகமாக மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் சினிமா, கல்வி, வணிகம் உட்பட அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. திரைப்பிரபலங்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக கமல் ஹாசன் லாக் டவுன் சமூக விஷயங்களை கூர்ந்து கவனித்து அது குறித்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது பற்றி டிவிட்டரில் பதிவிட்ட கமல், “உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.” என தெரிவித்துள்ளார்.
உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்பு கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதை செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 4, 2020