பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.
கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.
அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.
அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்தனர்.
மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில், வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடி வருகிறார். முன்னதாக போட்டியாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு கடிதம் எழுத அறிவுறுத்தப்பட்டனர். அப்போது விக்ரமன் அண்ணல் அம்பேத்கருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து கமல் ஹாசன் அந்த வாரத்தில் தான் எழுதிய கடிதம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்த விக்ரமனின் தந்தை கமல் எழுதிய கடிதம் குறித்து பேசியிருந்தார். இந்நிலையில் நேற்று இதுபற்றி கமல்ஹாசன் பேசுகையில்,"விக்ரமன் அப்பா என்னோட கடிதத்தை பத்தி சொன்னது எனக்கு ரொம்ப பெருமையா இருந்துச்சு" என்றார். அப்போது பேசிய விக்ரமன்,"அவருக்கு உங்களை ரொம்ப புடிக்கும் சார். எப்போதும் உங்களை பற்றி பேசுவாங்க. உங்களுடைய நடிப்பு, அரசியல் சார்பு பற்றியும் நெறைய பேசுவாரு" என்றார்.
தொடர்ந்து பேசிய கமல்,"ரொம்ப சந்தோஷம். முற்போக்காளர் என்பதை அவர் நிரூபித்துவிட்டார். எனக்கு எழுதி இருந்தா கூட இவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன்ன்னு அம்பேத்கருக்கான உங்க கடிதம் பற்றி பேசிய போதே அது புரிஞ்சது" என்கிறார்.
Kamal sir appreciates #Vikraman father as a progressive dad 👏👏👏 #VaathiVikraman #AramVellum #BiggBossTamil #VoteForVikraman #Vikraman𓃵#Vikraman_Hero_Of_BBTamil6 #BiggBoss6Tamil #BiggBossTamil #vikraman #BiggBossTamil6 pic.twitter.com/G6brevbjgo
— Kapes (@kapespapa) December 31, 2022