தபால் வாக்கு தாமதமாக கிடைத்ததால் ரஜினி வாக்களிக்க இயலாமல் போனதற்கு நடிகர் கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடந்து வருகிறது. இதில் பல நடிகர்கள், நடிகைகள் அனைவரும் வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் தனது வாக்கை பதிவு செய்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘நடிகர் சங்க தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவு செய்தது சந்தோஷமாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம். போஸ்டல் ஓட்டு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. அடுத்த முறை இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ரஜினியின் ஓட்டு மிக முக்கியமானது. அது இல்லாதது வருத்தமளிக்கிறது. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்.
நடிகர் சங்க தேர்தலில் அரசியல் இருப்பதாக தெரியவில்லை. இருந்தால் அது இருக்க கூடாது என்பது எனது விருப்பம்’ இவ்வாறு கமல் கூறினார்.