www.garudavega.com

"எப்ப தாத்தா ஆவீங்க?".. ஸ்ருதிஹாசன் திருமணம் பற்றி சூசகமாக பேசிய கமல்! #BIGGBOSSULTIMATE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai, BiggBossUltimate, 2022, Jan 31:- விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த 5 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

Kamal Haasan Opens up indirectly Shruthi Haasan marriage

பிக்பாஸ் ஓடிடி

இதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகக் கூடிய பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியின்போது, இந்த அறிவிப்பை நடிகர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதுவரை ஒளிபரப்பான அனைத்து சீசன் போட்டியாளர்களையும் கொண்டு இந்த நிகழ்ச்சி நடக்கத் தொடங்கியுள்ளது.

Also Read: மாளும்மா.. மொத்த மாலத்தீவும் விழுந்துருச்சு!.. படு கிளாமர் பிகினி ஃபோட்டோ! இதுவரை வந்ததுலயே இது வேற மாரி..

பிக்பாஸ் அல்டிமேட்

டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நாள் எபிசோடு விஜய் டிவியிலும் நேரடியாக ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களாக வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

போட்டியாளர்கள் அனைவரையும் முன்னதாக நடிகர் கமல்ஹாசன் செட்டுக்கு வரவேற்று, அவர்களுக்கு உப்பு, மிளகு, தேன், பசு நெய், கீரை, கடுகு உள்ளிட்ட பல பொருட்களை ஒரு மரபாக கொடுத்து, அவற்றுடன் சேர்த்து ஒரு குறிப்பினையும் சொல்லி பிக்பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் அனுப்பிவைத்தார். அப்படித்தான் சுரேஷ் சக்ரவர்த்தியை நடிகர் கமல்ஹாசன் வரவேற்றார்.

எப்போ தாத்தா ஆவீங்க?

அப்போது கமலிடம் பேசிய சுரேஷ் சக்ரவர்த்தி, எல்லோரும் தன்னை தாத்தாவாக ஏற்பதாக கூறியதுடன், “நீங்கள் எப்போ தாத்தாவாக போகிறீர்கள்?” என கேட்டார். அதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன், “இந்த கேள்விக்கு என் மகள் ஸ்ருதி தான் பதில் சொல்ல வேண்டும்” என்று தன் மூத்த மகளும் முன்னணி இளம் நடிகையுமான ஸ்ருதிஹாசனுக்கு திருமணம் ஆகி, அவருக்கு குழந்தை பிறக்கும் போது தான் தாத்தா ஆகலாம் என்பதை சூசகமாக குறிப்பிட்டார்.

ஆனாலும் சுரேஷ் சக்ரவர்த்தி, “இல்லை.. நீங்கள் திரைத்துறையில் எப்போ தாத்தா ஆக போறீங்க?” என்று கேட்டார். அதற்கும் கமல், “இந்தியன் படம் வெளியான பின்னரே தாத்தா என அழைக்கத் தொடங்கினார்கள் பலர்” என்று இந்தியன் தாத்தாவை குறிப்பிட்டு கமெண்ட் அடிக்க, இப்படி இவர்களின் உரையாடல் படு சுவாரஸ்யமாக போனது.

Kamal Haasan Opens up indirectly Shruthi Haasan marriage

2022 கமல் fansக்கு செம ட்ரீட்

அதன் பிறகு, சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனிடம் இருந்து, இந்த வருடம் அவருடைய ரசிகர்களுக்கு என்ன திரைப்படம் கிடைக்கும்? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு கமல்ஹாசன், “ரசிகர்களுக்கு இந்த வருடம் ‘விக்ரம்’ திரைப்படம் கிடைக்கும். அதுதான் கையில் இருக்கிறது!” என்று பதில் கூறினார். இதனால் கமல் ரசிகர்கள் குஷி ஆகிவிட்டனர்.

Also Read: இவர் படத்துல ஜீவா.. ஜெய்.. ஸ்ரீகாந்த்.. காம்பினேஷனே களைகட்டுதே! தொடங்கிய பூஜை!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Opens up indirectly Shruthi Haasan marriage

People looking for online information on Bigg Boss OTT, Bigg Boss Ultimate, Kamal Haasan, Shruthi Haasan will find this news story useful.