முன்னாள் மத்திய அமைச்சர், சமூக சேவகர் மாத்ருபூமி நிறுவன எம்டி உள்ளிட்ட பண்முகம் கொண்டவர் வீரேந்திர குமார். இவர் கேரளா மக்களிடையே மிகவும் பிரபலமானவர். மேலும் பல ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அவர் நேற்று (28/05/2020) மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 84. அவரது மறைவு கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அவருக்கு கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, பிருத்வி ராஜ், நிவின் பாலி, பிரதமர் நரேந்திர மோடி, கேரளா முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மாத்ருபூமி எம்டி வீரேந்திர குமாரின் மறைவு எனக்கு வருத்தத்தை அளித்துள்ளது. அவர் முன்னாள் மத்திய அமைச்சர், சமூக சேவகர் , நல்ல மனிதர் என பண்முகம் கொண்டவர். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
Sad to learn the demise of M.D of Mathrubhumi, M.P Veerendra Kumar, Who donned many hats as a former union minister, an Author and a Socialist, but always a very good human being. My condolences to the family and people close to him.
— Kamal Haasan (@ikamalhaasan) May 29, 2020