100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 -ன் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது.
Image Credit : Vijay Television
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றங்கள் நடைபெற்ற பிறகு வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இன்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே-வில் கமல் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த போட்டியாளர்களிடம் பேசினார். அவர்களது பிக்பாஸ் வீடு பற்றிய அனுபவங்கள் குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.
Image Credit : Vijay Television
இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன் அங்கு பிக்பாஸ் கோப்பையை அறிமுகம் செய்தார். அதன்பின்னர் மூவருக்கும் தான் எழுதிய கடிதத்தையும் கொடுத்தார். அசீம்-காக கமல்ஹாசன் எழுதிய கடிதத்தில், "அன்பு தம்பி அசீம், உங்கள் தளராத தன்முனைப்பும், தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியவை. அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இறுதி இலக்கை எட்டி இருக்கிறீர்கள். தவறுகளில் இருந்து உங்களை திருத்திக் கொண்டு மாற்றிக் கொள்ள முயற்சி செய்து இருக்கிறீர்கள். மக்களுக்கு உங்களை பிடித்திருக்கிறது. அசீம் தன்னை அசீமாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு சிலர் கொடுத்த பரிசு இது. நீங்கள் உழைத்து உயர எனது வாழ்த்துக்கள். உங்கள் நான் கமல்ஹாசன்" என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
Image Credit : Vijay Television
அதேபோல, ஷிவினுக்காக கமல்ஹாசன் எழுதியிருந்த கடிதத்தில், "அன்புச் சகோதரி ஷிவின், போட்டி, வெற்றி, புகழ், அங்கீகாரம் இவற்றையெல்லாம் தாண்டி, உங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதை நீங்கள் செவ்வனே செய்தீர்கள். கற்களும் முட்களும் நிறைந்த பாதையில் நீங்கள் கடந்து வந்திருக்கிறீர்கள். சமூகத்துடனான உங்கள் உரையாடல் தொடர வேண்டும். பெரும் செயல்களை நோக்கி, உங்களை நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரன் கமல்ஹாசன்" என குறிப்பிட்டிருந்தார். இதனை படித்த ஷிவின் உணர்ச்சிவயப்பட்டபடி புன்னகை செய்திருந்தார்.