சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் தமிழக தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தான் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் போட்டியிட்டுள்ளார்.
இதே தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார், அமமுக சார்பில் துரைசாமி என்ற சேலஞ்சர் துரை, நாம் தமிழர் கட்சி சார்பில் அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிட்டனர். இதனிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கமல் ஹாசன் முன்னிலை வகித்து வந்தார்.
தற்போதைய நிலவரப்படி கமல்ஹாசன் 11,300 வாக்குகளுக்கு மேல் பெற்று முன்னிலையில் உள்ளார்.