www.garudavega.com
iTechUS

அடடே.. பிக்பாஸ் தமிழ் சீசன் 6-ன் பிரம்மாண்ட TROPHY.. அறிமுகப்படுத்திய கமல் ..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 -ன் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற்றது.

Kamal Haasan Introduces BiggBoss6 Trophy in Grand Finale

                                              Image Credit : Vijay Television

இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி,  மணிகண்டா ராஜேஷ், ரச்சிதா, ADK, கதிரவன், அமுதவாணன், மைனா ஆகியோர் வெளியேறினர்.

Kamal Haasan Introduces BiggBoss6 Trophy in Grand Finale

Image Credit : Vijay Television

இதனையடுத்து இந்த பிக்பாஸ் வீட்டில், Finale விற்கு அசீம், விக்ரமன், மைனா, அமுதவாணன் மற்றும் ஷிவின் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர். இதனிடையே வீட்டுக்குள் முன்னதாக வீட்டில் பண மூட்டையை பிக்பாஸ் அறிமுகம் செய்திருந்தார். இந்த அறிவிப்பு வெளிவந்த உடனேயே கதிர் தான் பண மூட்டையுடன் வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.

Kamal Haasan Introduces BiggBoss6 Trophy in Grand Finale

Image Credit : Vijay Television

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அமுதவாணன் பணப்பெட்டியை எடுத்து தான் வெளியேறுவதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருந்தார். இப்படி பரபரப்பான சம்பவங்களுக்கு இடையே பிக்பாஸ் மிட் வீக் எவிக்ஷன் மூலமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

Kamal Haasan Introduces BiggBoss6 Trophy in Grand Finale

Image Credit : Vijay Television

இந்நிலையில் வீட்டுக்குள் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே எஞ்சி இருந்தனர். இன்று நடைபெற்ற கிராண்ட் ஃபினாலே-வில் கமல் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த போட்டியாளர்களிடம் பேசினார். அவர்களது பிக்பாஸ் வீடு பற்றிய அனுபவங்கள் குறித்து கேள்வியும் எழுப்பி இருந்தார். அப்போது ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி இருந்தனர்.

இதனிடையே பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற கமல் ஹாசன் அங்கு பிக்பாஸ் கோப்பையை அறிமுகம் செய்தார். அவரது கையை அங்கிருந்த மேஜை மீது வைத்து அழுத்த, அவரை தொடர்ந்து மூன்று போட்டியாளர்களும் தங்களுக்கான பட்டனின் மீது கைவைத்து அழுத்தினர். அப்போது, உள்ளிருந்து பிரம்மாண்ட டிராஃபி வெளியே வந்தது. இதனை போட்டியாளர்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Introduces BiggBoss6 Trophy in Grand Finale

People looking for online information on Biggboss6Tamil, KAMALHAASAN, Trophy will find this news story useful.