பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்ததாக அதிகாரபூர்வத் தகவல் வெளியானது.
Also Read | OFFICIAL: 10 மொழிகளில் வெளியாகும் சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. 3D வேற இருக்கா? மாஸ்
பல்மோரளில் இருக்கும் கென்சிங்டன் அரண்மனையில் ராணி எலிசபெத் உயிர் பிரிந்தது. இன்று ராணியின் உடல் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதிய அரசராக சார்லஸ் பதவி ஏற்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி எலிசபெத் இறந்த 9 நாட்களுக்குப் பிறகு தான் அரச குடும்பத்தின் சம்பிரதாயப்படி ராணி எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் என்பதால் அதுவரை அரச குடும்பத்தின் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. நான்காம் நாளில் இருந்து உடல் பொதுமக்கள் பார்வைக்கு அஞ்சலிக்காக வைக்கப்படும்.
ராணி எலிசபெத் மறைவால், இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், ராணி எலிசபெத் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய இரங்கல் செய்தியில், "எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார் .
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். (1/3) pic.twitter.com/EFmKfqls7U
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2022
Also Read | கர்ப்பிணி பெண்ணாக நடிகை சமந்தா நடிக்கும் 'யசோதா'.. 5 மொழிகளில் வெளியான மிரட்டலான டீசர்!