கடைசியாக 2018 ஆம் ஆண்டு விஸ்வரூபம்-2 படம் கமல் நடிப்பில் வெளியானது.
அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து, அவரின் அடுத்த படமாக விக்ரம் படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக விக்ரம் படத்தின் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படத்துக்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தார் லோகேஷ். அதையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
கொரோனா பாதிப்புகளால் அவ்வப்போது படப்பிடிப்பில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் கமல், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய மூன்று பிஸியான நடிகர்களை வைத்து மும்முரமாக படப்பிடிப்பை நடத்திவந்தார் லோகேஷ். மொத்தமாக 110 நாட்கள் நடந்த படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னதாக முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ, மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு வரும் மே 15 ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகிறது. இந்நிலையில் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜின் டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் @ikamalhaasan பாராட்ட!🙏🏻❤️#VikramFromJune3 #Vikram pic.twitter.com/dORNtJxL5P
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 4, 2022
அதில், "36 வருட தவம்! எனக்குள் இருக்கும் இயக்குனரை என் உலகநாயகன் கமல்ஹாசன் பாராட்ட!🙏🏻" என டிவீட் செய்துள்ளார். பின்னூட்டத்தில் 'கமல், விக்ரம்படத்தை பார்த்து விட்டு லோகேஷை பாராட்டி வாழ்த்தியதாக' கமல் ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/