பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து எலிமினேட் ஆகி மீண்டும் மகேஸ்வரி, மணிகண்டா, மைனா நந்தினி, தனலட்சுமி, அசல் கோலார், ஷெரினா, நிவாஷினி, ராம், சாந்தி, ராபர்ட் மற்றும் ஜிபி முத்து ஆகிய போட்டியாளர்கள் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.
இதனிடையே, Sacrifice என்ற பெயரில் சில டாஸ்க்குகளும் தற்போதுள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும் பிக் பாஸ்க்காக எவ்வளவு தூரம் வரை செல்வார்கள் என்பதை அறிவதற்காக சில கடினமான டாஸ்க்குகளும் கொடுக்கப்பட்டிருந்தன. இவற்றை சக போட்டியாளர்களே கொடுத்தனர்.
இதன் ஒரு அம்சமாக முடியை எடுப்பது, உடையை மாற்றுவது உள்ளிட்ட டாஸ்குகள் வீட்டுக்குள் இருந்த அசிம், விக்ரமன், ஷிவின், அமுதவாணன், ஏடிகே, மைனா ஆகியோருக்கு கொடுத்தனர். இந்நிலையில் இந்த வார இறுதியில் அசிமிடம் பேசிய கமல்ஹாசன், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த போட்டியாளர்கள் உங்களிடம் சொன்ன விமர்சனங்கள் கருத்துக்கள் பற்றி உங்களுடைய பார்வை என்ன என்று கேட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த அசிம், “அது அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாகவே நான் பார்த்தேன். மேலும் சில கருத்துக்களை அவர்கள் கூறியிருந்தார்கள். அவையெல்லாம் நீங்கள் வார வாரம் எங்களுக்கு குறிப்பாக கொடுத்தவைதான். அவற்றை தான் மொத்தமாக சேர்த்து அவர்கள் சொல்லியிருந்தது போல் எனக்கு பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இவற்றையெல்லாம் பொறுமையாக கேட்டு பின்பு பதில் அளித்த கமல்ஹாசன், “கருத்துக்கள் எப்போதும் உண்மையாகாது. அதை உங்களுடைய தராசுகளில் நீங்கள் வைத்து பாருங்கள். அப்படி நீங்கள் உங்களுக்கு உண்மையாகவும் சரியாகவும் இருக்கும் பொழுதும், நீங்கள் விரும்பி தியாகம் செய்யும்பொழுதும் மக்கள் ஒரு டானிக் கொடுப்பார்கள். அந்த டானிக் தான் அசிம் காப்பாற்றப்பட்டது.” என குறிப்பிட்டார்.
ஆம், அசிம் இதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலேவுக்கு போவதாக கமல்ஹாசனால் அறிவிக்கப்பட்ட முதல் போட்டியாளர் ஆகிறார். கமல் இதை சொன்ன அந்த கணம் அசிம் மகிழ்ச்சி பெருக்கில் நன்றி கூறினார். மக்களும் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.