www.garudavega.com

"இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்தார். நாளை".. DSP பட விழாவில் பேசிய கமல்ஹாசன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

DSP படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டார்

Kamal Haasan about Vijay Sethupathi DSP Movie Trailer Launch

கடந்த ஆண்டு 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி தனது 46 வது படத்தை அறிவித்தார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கியது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முடிந்து படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். விவேக் ஹர்சன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சி இயக்குனராக பணியாற்றுகிறார். கலை இயக்குனராக குமார் பணியாற்ற, யுகபாரதி இந்த படத்தின் பாடல்களை எழுதியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், "என்னைப் போலவே விஜய்சேதுபதி சினிமா நேசர்... நான் மார்லன் பிராண்டோ முன்பு மண்டியிட்டு அவரது கையில் முத்தமிடுவேன்.அப்படித்தான் இன்று விஜய்சேதுபதி என் முன் காலில் விழுந்தார். நாளை விஜய் சேதுபதி முன்பு காலில் விழு வேறொரு கலைஞன் வருவான்." என பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan about Vijay Sethupathi DSP Movie Trailer Launch

People looking for online information on DSP, Kamal Haasan, Vijay Sethupathi will find this news story useful.