பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 60 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று கமல்ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கும் நாள் என்பதால், கடந்த வாரம் நடைபெற்ற கால் சென்டர் டாஸ்க் பற்றி அதிகம் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் 'எத்தனை முறை சொன்னாலும் அவர்களுக்கு புரிய மாட்டேங்குது' என்பது போல் கமல் கோபமாக பேசுவதையும் காண முடிகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.