COBRA M Logo Top
www.garudavega.com

VTK AUDIO LAUNCH: "உங்களோட எந்த படத்த நான் ரீமேக் பண்லாம்?"- சிம்புவின் கேள்வி.. கமல் நச் பதில்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சிம்பு நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

Kamal Answer to STR about his movie remake VTK Audio Launch

இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும், கதாநாயகனாக நடித்துள்ள சிம்பு, 'முத்து' எனும் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம், வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றியுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kamal Answer to STR about his movie remake VTK Audio Launch

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, 02.09.2022 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த விழா நடக்கும் என்றும்  அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ரசிகர்கள் முன்னிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் இசை மற்றும் டிரெய்லர் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

Kamal Answer to STR about his movie remake VTK Audio Launch

அவரிடத்தில் நடிகர் சிம்பு, “நான் உங்களுடைய படங்களில் எதாவது ஒரு படத்தின் ரீமேக்கில் நான் நடிக்க வேண்டும் என நீங்கள் ஆசைப்பட்டால் அந்து எந்த படம் சார்?” என கேட்டார். இந்த கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், “நீங்கள் நிறைய படம் நடிக்க வேண்டும். அதுதான் என்னுடைய ஆசை. ஆனால் ஏதாவது ஒரு படம் நடிக்கணும் என்றால் எங்கூட நடிக்கணும்” என்றார். உடனே அரங்கம் கலகலவென அதிர்ந்து கரகோஷத்தால் ஆர்ப்பரித்தது.

Kamal Answer to STR about his movie remake VTK Audio Launch

இதில் நடிகர் இப்படத்தின் இயக்குநர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் நடிகர் கமல்ஹாசன் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Answer to STR about his movie remake VTK Audio Launch

People looking for online information on Gautham Vasudev Menon, Kamalhassan, Silambarasan TR will find this news story useful.