ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், உதயநிதி ஸ்டாலின் தோன்றியுள்ளனர்.
Also Read | மலையாளத்தில் அறிமுகமாகும் தமன்னா.. ஹீரோ இவரா? மியூசிக் டைரக்டர் யாரு? செம்ம
சமீபத்தில் நடந்து முடிந்த 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த உதவிகரமாக இருந்த விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு விழா சென்னையில் நடந்தது.
இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் விக்னேஷ் சிவன், இசையமைப்பாளர் ரஹ்மான் கலந்து கொண்டனர். 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக பாடல் ஒன்றை விக்னேஷ் சிவன் இயக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். மேலும், அந்த வீடியோவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி இருந்தனர்.
அதே போல, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவையும் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். அந்நிகழ்ச்சியில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள், தமிழ் பண்பாட்டை போற்றும் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றிருந்தது.
அந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசனின் பின்னணி குரலில் தமிழ்நாட்டின் பண்பாட்டின் விழுமியங்களை கூறும் வகையில் ஒரு வீடியோ ஒளிபரப்பானது.
அதில், 1200 ஆண்டுகளுக்கு முன் மயிலாடும்பாறையில், தமிழர் கலை, பண்பாடு செழித்து இருந்ததற்கான சான்று, ஒன்றாம் நூற்றாண்டில் கரிகால பெருவளத்தான் சோழன் கல்லணை காட்டியது தொடர்பான வீடியோவை முப்பரிமாணத்துடன் கமலின் குரலில் திரையிடப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வின் சிறப்பம்சமாக இந்த வீடியோ கவனிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வின் புகைப்படங்களை ஆலங்குடி சட்ட மன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை அமைச்சருமான மெய்யநாதன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற விழாவில்,
மாண்புமிகு கழக இளைஞரணிச் செயலாளர் திரு. உதயநிதி ஸ்டாலின் MLA அவர்கள் உள்ளிட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு., 44வது #ChessOlympiad போட்டியை வெற்றிகரமாக நடத்திட சிறப்புற பணியாற்றிய விழா குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி கௌரவித்த இனிய நிகழ்வின் போது." என கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,"தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பான #44thChessOlympiad போட்டி மிகச் சிறப்பாக நடைபெற பங்களிப்பை வழங்கிய அரசு அலுவலர்-திரைத்துறையினர் உள்பட பல்வேறு துறையினரை கவுரவிக்க, மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டோம்" என கூறியுள்ளார்.
கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு.,
44வது #ChessOlympiad போட்டியை வெற்றிகரமாக நடத்திட சிறப்புற பணியாற்றிய விழா குழுவினர், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி கௌரவித்த இனிய நிகழ்வின் போது.,
2/2 pic.twitter.com/Bb1C8VXy7a
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) September 1, 2022
தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பான #44thChessOlympiad போட்டி மிகச் சிறப்பாக நடைபெற பங்களிப்பை வழங்கிய அரசு அலுவலர்-திரைத்துறையினர் உள்பட பல்வேறு துறையினரை கவுரவிக்க, மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்டோம். @SMeyyanathan pic.twitter.com/CICPFgJZrM
— Udhay (@Udhaystalin) September 1, 2022
Also Read | உலகின் விலையுயர்ந்த சொகுசு காரில் மாஸாக நடிகர் சிம்பு.. 'VTK' படத்தின் புதிய போஸ்டர்!