www.garudavega.com

பிரசவ வலி.. குழந்தை பிறந்த தருணம்.. காஜல் அகர்வாலின் பதிவு! தீயாய் பரவும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மும்பை: நடிகை காஜல் அகர்வால் தனது பிரசவ அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Kajal Aggarwal about Her labor pain and child birth Viral post

Also Read | ஆஹா.. அரவிந்த் சாமி நடிக்கும் புதிய ஹெய்ஸ்ட் திரில்லர் படம்.. எப்போ ரிலீஸ்? முழு தகவல்

சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார்.  மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதை கணவர் கௌதம் கிட்ச்லு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  பின் தனது வளைகாப்பு புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டார். குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வளைகாப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

Kajal Aggarwal about Her labor pain and child birth Viral post

பிரசவ மாதமாக மே மாதத்தை காஜல் அகர்வாலின் நண்பர் குறிப்பிட்டு இருந்தார். பிரசவத்துக்கு காஜல் அகர்வாலும் ஏரோபிக் உடற்பயிற்சி செய்து தயாராகும் வீடியோவும் வெளியானது. அவ்வப்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதை நடிகை காஜல் வாடிக்கையாக கொண்டிருப்பார்.

இச்சூழலில் காஜல் அகர்வாலுக்கு நேற்று முன்தினம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை காஜல் - கௌதம் கிட்ச்லு தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்பட உள்ளது.

Kajal Aggarwal about Her labor pain and child birth Viral post

குழந்தை பிறந்த தருணத்தை நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், என் குழந்தை நெய்லை இந்த உலகிற்கு வரவேற்பதில் உற்சாகமும், மகிழ்ச்சியும். எங்களின் பிறப்பு களிப்பூட்டும், மகத்தான, நீண்ட, மிகவும் திருப்திகரமான அனுபவம்!

குழந்தை பிறந்த சில நொடிகளில் வெண்ணிற கோழை சவ்வு மற்றும் நஞ்சுக்கொடியால் மூடப்பட்டு என் மார்பில் அவனை பிடித்துக் கொண்ட தருணம் விவரிக்க முடியாத உணர்வு! அந்த ஒரு கணம் எனக்கு அன்பின் ஆழமான திறனைப் புரிய வைத்தது, மிகப்பெரிய அளவிலான நன்றியுணர்வை உணர வைத்தது.

Kajal Aggarwal about Her labor pain and child birth Viral post

பிரசவம் என்பது நிச்சயமாக இது எளிதானது அல்ல- அதிகாலையில் இரத்தம் கசிய 3 தூக்கமில்லாத இரவுகள், துர்நாற்றம், மெல்லிய வயிறுடன் கனமான தோல், உறைந்த தோள் பட்டைகள், மார்பகங்களின் நிச்சயமற்ற தன்மை, கவலை, எல்லாவற்றையும் சரியாகச் செய்தாலும் முதலில் ஏற்ப்பட்ட பதட்டம். எல்லாம் இந்த தருணத்திற்காக தான்...

விடியற்காலையில் இனிமையான அரவணைப்புகள், நம்பிக்கையான அங்கீகாரத்துடன் ஒருவரையொருவர் கண்களைப் பார்த்து, அபிமானமான சிறிய முத்தங்கள், நாங்கள் இருவரும் மட்டுமே இருக்கும் அமைதியான தருணங்கள். ஒரு அழகான பயணத்துக்கான ஆரம்பப்புள்ளி.

பிரசவத்திற்குப் பின் கவர்ச்சியாக இல்லை, ஆனால் அது நிச்சயமாக அழகாக இருக்கும்!" என  காஜல் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kajal A Kitchlu (@kajalaggarwalofficial)

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

 

பிரசவ வலி.. குழந்தை பிறந்த தருணம்.. காஜல் அகர்வாலின் பதிவு! தீயாய் பரவும் ஃபோட்டோ வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kajal Aggarwal about Her labor pain and child birth Viral post

People looking for online information on Kajal Aggarwal, Kajal Aggarwal about Her child birth, Kajal Aggarwal about Her labor pain will find this news story useful.