காஜல் அகர்வால் தனது குழந்தையுடன் பாகுபலி ஸ்டைலில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Also Read | இமான் இசையில்.. ஸ்ரேயா கோஷல் பாடிய டூயட்.. Captain படத்தின் அடுத்த Single!
தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அஜித்துடன் விவேகம், விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், சூர்யாவுடன் மாற்றான், கார்த்தியுடன் நான் மகான் அல்ல, அழகுராஜா, தனுஷ் உடன் மாரி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடைசியாக காஜல் அகர்வால் நடிப்பில் தமிழில் ஹே சினாமிகா படம் வெளியானது.
சென்ற 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் காஜல் அகர்வால், தொழிலதிபர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருவீட்டார் பங்கு பெற்ற திருமணம் நடைபெற்றது.
காஜல் அகர்வால் - கௌதம் கிட்ச்லு தம்பதியருக்கு கடந்த மாதம் (19.04.2022) அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு 'நெய்ல்' என பெயரிட்டுள்ளனர். குடும்ப பெயரான கிட்ச்லு உடன் இணைத்து நெய்ல் கிட்ச்லு என இக்குழந்தை அழைக்கப்படுகிறது. அன்னையர் தினத்தில் குழந்தையின் புகைப்படத்தை காஜல் அகர்வால் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் காஜல் அகர்வால், தனது குழந்தையின் பாதம் தனது முன் நெற்றியில் படுமாறு உள்ள புகைப்படத்தை பகிர்ந்து இயக்குனர் ராஜமௌலி மற்றும் பாகுபலி பட நடிகர்களை டேக் செய்து உள்ளார்.
பாகுபலி படத்தில் அரச வாரிசின் பாதத்தை கட்டப்பா கதாபாத்திரம் தனது நெற்றியில் வைக்கும் காட்சியை நினைவுபடுத்தும் வகையில் இந்த புகைப்படம் அமைந்துள்ளது.
காஜல் அகர்வால், ராஜமௌலி இயக்கத்தில் மகதீரா படத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | பிரகாஷ் ராஜை வெறுப்பேற்றும் கார்த்தி.. வைரலாகும்'விருமன்' படத்தின் SNEEK PEEK காட்சி!