‘விக்ரம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.
Also Read | 'விக்ரம்' ரிலீஸ் நாளில்.. கமல்ஹாசனுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு! பின்னணி தகவல்
இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.
தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை காட்சியில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் படத்தில் சில காட்சிகளில், லோகேஷ் கனகராஜ் முன் இயக்கிய கைதி படத்தின் ரெபரன்ஸ் இடம் பெற்றுள்ளது.
கைதி படத்தில் பிஜோய் கதாபாத்திரம் (நரேன்) , அடைக்கலம் கதாபாத்திரம் (ஹரிஷ் உத்தமன்) , அன்பு கதாபாத்திரம் (அர்ஜூன் தாஸ்) ஆகிய கதாபாத்திரங்கள் விக்ரம் படத்திலும் இடம் பெற்றுள்ளன. லாரி உரிமையாளர் தீனாவும், கைதி படத்தில் கார்த்தியின் குழந்தையாக வரும் பெண் குழந்தையும் விக்ரம் படத்தில் நடித்துள்ளனர்.
கைதி படத்தின் அடுத்தக்கட்டமாக விக்ரம் படம் அமைந்துள்ளது. மேலும் விக்ரம் படம், கைதி-2 & விக்ரம் -3 படங்களுக்கும் லீட் உடன் நிறைவடைகிறது. சூர்யாவின் சிறப்பு தோற்றம் இதற்கு முழு முதற்காரணமாக அமைந்துள்ளது.
Also Read | குக் வித் கோமாளி அஸ்வின் - பிரபு சாலமன் இணையும் புதிய படம்.. வெளியான வித்தியாசமான டிரெயலர்!