பிக்பாஸ் வீட்டுக்குள் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மதுமிதா செய்தியாளர்களை சந்தித்தார். அதில், தண்ணீர் பற்றித் தான் சொன்ன கவிதைக்காக மற்ற போட்டியாளர்கள் தனக்கு எதிராக பேசியதாக தெரிவித்தார்.
மேலும் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர மீதமுள்ள 8 பேர் தன்னை கிண்டல் செய்ததாகவும் அவர்கள் தன்னை துன்புறுத்தியதாகவும் கூறினார். என் தமிழ்நாட்டுக்காக நான் பேசுன கவிதைக்கு ஒரு பொண்ணுனு பார்க்காம எவ்ளோ அசீங்கப்படுத்துவீங்க. அந்த கவிதையில என்ன தப்பு இருக்கு. அந்த கவிதைய தப்புனு சொல்லிட்டு என் ஊருல இருக்குற எல்லோரையும் மக்களுக்கு அடையாளம் காட்டாம விடமாட்டேன் என்றார்.
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பிக்பாஸ் பிரபலமும் , நடிகையுமான காஜல் பசுபதி, மது அப்நார்மல் பத்தி பேசத் தகுதி வேணும். நீங்க கண்டிப்பா பேசக்கூடாது. வாங்க ரெண்டு பேரும் டாக்டர்கிட்ட போகலாம் என்றார்.
மற்றொரு பதிவில், தமிழ் கலாச்சாரம், பெண் உரிமை அப்படி, இப்படினு தமிழ் நாட்டுக்காக உள்ள போராடுற நீங்க, வெளிய இருக்கப்பவே போராடி இருக்கலாமே, எப்பவும் போராடலாமே. என்ன போராட்டம் பண்ணிங்க இப்பவரைக்கும் தமிழ் மக்களுக்காக. உங்க பேமென்ட்டுக்காக போராடி நாங்க பாத்தோம். என்றார்.