இயக்குநர் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்து கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியான படம் 'மகாமுனி'. இந்த படத்தில் ஆர்யாவுடன் மஹிமா நம்பியார், இந்துஜா, இளவரசு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்துக்கு எஸ்.எஸ்.தமன் பின்னணி இசையமைத்துள்ளார்.
இந்த படம் குறித்து Behindwoods TVக்கு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது அவரிடம் தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பற்றியும் அவர்கள் சினிமா அல்லாது வேறு துறையில் இருந்தால் என்னவாக இருப்பார்கள் என்று கேட்கப்பட்டது.
தளபதி விஜய் குறித்து பேசிய அவர், ''விஜய் அண்ணாவ எண்டர்டெயின்மென்ட் தாண்டி வேறு எதையும் யோசிக்க முடியல. அகரம் பவுண்டேசன்காக குறும்படம் பண்ணிக்கொடுத்தார். அவரது உதவியாளர்களுக்கு பணம் வாங்கவில்லை. கேரவன்,உணவு எல்லாவற்றையும் அவரே பார்த்து கொண்டார். சமூக விழிப்புணர்வுக்கா இதனை பன்றோம் என்பதால் அவர் பணம் வாங்கவில்லை.
மேலும் அன்று மாலை 6.50 வரை வேலை செய்தார். அப்போது அவரது உதவியாளர்கள் சொன்னார்கள். விஜய் அண்ணா 9 மணிமுதல் மாலை 6 மணி வரை தான் வேலை செய்வார் என்று சொன்னார். அதில் அவருடைய சமூக அக்கறைய பார்த்தேன். அதனால் அவர் நல்ல அரசியல்வாதியாக இருப்பார்'' என்றார்.
பின்னர் தல அஜித் குறித்து பேசிய அவர், நான் போகும் ஜிம்மில் பணியும் செய்யும் ஊழியர் தினமும் என்னிடம், தல படம் ஹிட்டாகிடும்லனா என்று கேட்பார். அதனை ஒரு நாள் விடாமல் தினமும் கேட்பார். நானும் சூப்பர் ஹிட்டாகும் என்று சொல்வேன். இது மங்காத்தா படம் அப்போது நடந்தது.
அந்த மாதிரி ரசிர்களிடம் இருக்கும் அன்பு நான் வேறு யாரிடமும் பார்க்கவில்லை. ரசிர்கள்னு சொல்றதவிட வெறியர்கள்னு தான் சொல்லணும். சிலருக்கு மூனு நாலு படம் பண்ணலனா ஃபேன்ஸ் கோபப்படுவாங்க. ஆனா எதுபண்ணாலும் ரசிகர்கள் கொண்டாடுவாங்க. உலகத்துல வேற எங்கயும் இத பார்க்க முடியாது'' என்றார்.