ராட்சசியுடன் கார்த்தி நடித்த படத்தின் ஸ்டேட்டஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகா மற்றும் கார்த்தி முதன்முறையாக இணைந்து நடித்து வரும் புதிய திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.

Jyothika and Karthi wrap up their film with Jeethu Joseph

‘பாபநாசம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் தமிழில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் ஜோதிகாவும், கார்த்தியும் அக்கா-தம்பியாக நடிக்கின்றனர். இந்த படத்தில் சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வியாகாம்18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பன்ஸ் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்திருப்பதாக ஒளிப்பதிவாளர் ஆர்டி.ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். விரைவில் கார்த்தி-ஜோதிகா இணைந்து நடிக்கும் படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது கார்த்தி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கைதி’ திரைப்படத்தின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். மேலும், பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல், ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசி’ திரைப்படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Jyothika and Karthi wrap up their film with Jeethu Joseph

People looking for online information on Jeethu Joseph, Jothika, Karthi, Sathyaraj will find this news story useful.