biggbossultimate: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக்பாஸ் ஓடிடி
பிரபலமான ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக செலிபிரிட்டி பிரஸ்மீட் டாஸ்க் வைக்கப்பட்டது. அதில் அனைத்து போட்டியாளர்களும் மற்ற போட்டியாளர்களை செலிபிரிட்டி போல் அமர வைத்து தங்களுடைய கேள்விக் கணைகளைத் தொடுத்தனர். அவர்களும் சளைக்காமல் அதற்கு பதில் கூறினர். இந்த டாஸ்க்கை தொடர்ந்து வனிதாவின் காபி பொடி பிரச்சனை பிக் பாஸ் வீட்டில் பேசப்பட்டுக் கொண்டு வந்தது.
இதனிடையே சண்டை சச்சரவுகள் இப்போதே தொடங்கப்பட்டுவிட்டன. குறிப்பாக குரூப்பாக பிரிவதும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிக விரைவில் நடந்து வருவதுடன் போட்டியாளர்கள் நேரடியாக தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர். முந்தைய சீசன்களை போலல்லாமல், போட்டியாளர்கள் எதற்கும் காத்திராமல் தங்களுடைய வியூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல பல பட்டங்கள்..
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளருக்கும் பட்டங்கள் கொடுக்கப்பட்டன. அதில் தாமரைக்கு மகா நடிகை, அனிதாவுக்கு விஷ பாட்டில், வனிதாவுக்கு நாட்டாமை உள்ளிட்ட படங்கள் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்பட்டன. இந்த நிகழ்வை அனிதா சம்பத் தொகுத்து வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய டாஸ்க் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது
ஊம் சொல்றியா.. ஊஹூம் சொல்றியா
இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒவ்வொரு போட்டியாளர்களின் முகம் பாதிக்கப்பட்ட ஒரு போர்டில், அவர்களை பிடிக்கும் என்றால் ஹார்ட்டின் குறியீட்டை பொருத்த வேண்டும். இதேபோல் பிடிக்கவில்லை என்றால் அவர்களின் படத்தக்கு நேரே தங்களுடைய ஹார்டினை வைக்க மாட்டார்கள். இந்த டாஸ்க் ஊம் சொல்றியா.. ஊஹூம் சொல்றியா என்கிற பெயரில் அரங்கேறியது.
ஜூலியின் அழுகை..
இதில்தான் ஜூலி அழுதிருக்கிறார், ஆம், தாமரையை கட்டிப்பிடித்து ஜூலி அழுது புலம்புவதாக ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதேபோல் ஜூலி தான் அழுவதற்கான காரணம் குறித்து நிரூப்பிடம் விளக்கிக் கொண்டும் இருந்தார். அப்போது, “வனிதா அக்கா, அவருக்கு நான் ஹார்டின் கொடுக்காததால், அதற்குப் பதிலாக அபிராமி கொடுத்ததால், என்னைவிட அபிராமி முக்கியமா என்று கோபித்துக் கொண்டார்” என்று சொல்லி ஜூலி அழுகிறார்.
வனிதா - அபிராமி காபி பொடி சண்டை
முன்னதாக வனிதா மற்றும் அபிராமி இருவருக்கிடையில் காபி பொடியில் சண்டை உண்டானது. அதன்படி வனிதா காபி பொடியை தான் வைத்துக் கொள்வதாக அடம்பிடித்தர். ஆனால் காபி பொடி என்பது பிக்பாஸ் வீட்டில் அனைவருக்கும் சொந்தமானது என்று சொல்லி அபிராமி அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனை தொடர்ந்து தனக்கு காபி வேண்டாம் என்று சொல்லி காபி பொடியை தூக்கிப் போட்டுவிட்டு வனிதா சென்றுவிட்டார்.
ஜூலிக்கு வந்த நெருக்கடி..
இந்த நிலையில்தான் வனிதா மற்றும் அபிராமிக்கு இடையிலான இந்த உரசல், இப்போது ஜூலி யார் பக்கம் நிற்பது என்கி நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில்தான் அபிராமி பக்கம் ஜூலி சென்றதாக, அதாவது அபிராமிக்கு ஜூலி ஹார்டின் கொடுத்ததாக வனிதா கோபப்பட்டு விட்டார் என்று ஜூலி அழுது புலம்புகிறார்.