RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
Also Read | "அன்பு செலுத்த அச்சப்பட வேண்டாம்".. வைரலாகும் கிருத்திகா உதயநிதியின் ட்வீட்!
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.
இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.
ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.
RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கார் விருது பரிந்துரைக்கு ஏற்கப்பட்டுள்ளது. சிறந்த பாடலுக்கான பிரிவில் (Best Original Song) இசையமைப்பாளர் S.S. கீரவாணி பெயர் இதன் மூலம் இடம்பெற்றுள்ளது. இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல்முறையாக இந்திய திரைப்பட பாடல் ஒன்று ஆஸ்கார் விருது பரிந்துரைக்கு முதல்முறையாக ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படம் சிறந்த பாடல் மற்றும் சிறந்த அந்நிய நாட்டு திரைப்படம் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோல்டன் குளோப் விருது விழா ஜனவரி மாதம் 10 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதற்காக ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி லட்சுமி ப்ரணதி ஆகியோர் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளனர். தற்போது நடிகர் ராம் சரண், அவரது மனைவி உபசன்னாவும் அமெரிக்கா சென்றுள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
Also Read | 'சகுந்தலம்' படத்தின் சோகமான ஸ்டில்லை பகிர்ந்து சமந்தா போட்ட பதிவு.. TRENDING இதான்