www.garudavega.com

தனுஷ் - JR NTR - வெற்றிமாறன் இணையும் படம் பற்றிய வதந்தி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் வெற்றிமாறன் ‘அசுரன்’, 'பாவக்கதைகள் (ஒரு பகுதி)' படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி முடித்துள்ளார். விரைவில் திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

Jr NTR Dhanush Vetrimaaran film news are absolutely false

தமிழ் சினிமாவில் நாவல்களை படமாக்குவதில் வல்லவரான இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படமான வாடிவாசலில், எழுத்தாளர் "சி சு செல்லப்பா" எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார்.

இதற்கு முன் வெற்றிமாறன் இயக்கிய "அசுரன்" மற்றும் "விசாரணை" படங்களும் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் "விடுதலை" படமும் நாவல்களையும் சிறுகதைகளையும் அடிப்படையாகக் கொண்டதே.

முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் டைட்டில் லுக் கடந்த ஆண்டு வெளியானது. வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாடிவாசல் படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.  படத்தின் பூர்வாங்க பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சில நாட்களுக்கு முன் வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன.

இந்த வெள்ளோட்ட படப்பிடிப்பில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் சூர்யா பயிற்சி எடுக்கும் கிளிம்ப்ஸ் வீடியோ  சூர்யா பிறந்த நாளை ஒட்டி வெளியானது குறிப்பிடத்தக்கது.

Jr NTR Dhanush Vetrimaaran film news are absolutely false

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் & ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளை மறுத்து இயக்குனர் வெற்றிமாறனின் மக்கள் தொடர்பு தரப்பு  ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், "கடந்த இரண்டு நாட்களாக, மிஸ்டர் ஜூனியர் என்டிஆர்-மிஸ்டர் தனுஷ்-மிஸ்டர் வெற்றிமாறன் படம் பற்றிய சரிபார்க்கப்படாத செய்திகளைப் படித்து வருகிறோம். அவை முற்றிலும் தவறானவை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். தயவு செய்து இது போன்ற ஊகங்களை தவிர்க்கவும்." என அதிகாரப்பூர்வமாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Jr NTR Dhanush Vetrimaaran film news are absolutely false

People looking for online information on Dhanush, Jr ntr, Vetrimaaran will find this news story useful.